பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

13
அ-2 இல்லறவியல்
அ-2-15 புறங்கூறாமை -19
அதிகார முன்னுரை

'புறங்கூறாமை' என்பது புறம் + கூறாமை என்னும் இரண்டு சொற்களின் இணைச்சொல்.

'புறத்தே போய்க் கூறாமை' - புறங்கூறாமை ஆயிற்று.

புறம் - இடம், பக்கம்.

- உட்புறம், வெளிப்புறம், முன்புறம், பின்புறம், இடப்புறம், வலப்புறம், கீழ்ப்புறம், மேற்புறம், கிழக்குப் புறம், மேற்குப் புறம், வடக்குப்புறம், தெற்குப்புறம் முதலிய விரிவான வழக்குகளை நோக்குக.

- ஆனாலும், 'புறம்' என்று தனித்துவரின், அகம் என்னும் சொல்லுக்கு மறுதலையான வெளிப்புறத்தையே - அயலிடத்தையே குறிக்கும்.

எனவே, புறங்கூறுதல், 'அயலிடத்தில் போய்க் கூறுதல்’ ஆயிற்று.

அந்நிலை, இருவர்க்குள் அகமாக உள்ள செய்தியைப் பற்றி அயலிடத்தில் - அயலாரிடத்தில் போய்க் கூறுதல் என்னும் பொருள் விரிவு பெற்றது.