பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

157


'அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு
கச்சமில் கைம்மாறு, அருள்ஐந்தால் - மெச்சிய
தோகை மயிலன்ன சாயலாய் தூற்றுங்கால்
ஈகை வகையின் இயல்பு’ - சிறுபஞ்சமிகை:1

(இப் பாடலில் மக்கள் தீங்கு வருமே என்னும் அச்சத்தாலும், தங்கட்கு நன்மை கிடைக்குமென்றும், அற உணர்வாலும், இதற்குக் கைம்மாறு கிடைக்குமென்று எண்ணியும், அருள் உணர்வாலும் ஆக ஐந்து காரணங்களுக்காக ஈகையறம் மேற்கொள்வதாகக் கூறப் பெறுகிறது)

‘மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இசைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்’ - நாலடி: 95

‘வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்’ - நாலடி:277:1

'துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் றீகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்(து)
அருளும் அவனை நகும்’ - நாலடி:273

’இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாம் கீழ்’ - நாலடி:279

‘என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப் போவர்’ - நாலடி:5:1-3

‘. . . . . . வரையாது கொடுத்தலும்
பரிசிலர் வாழ்க்கை பரிசிலர் ஏத்த’ - சிறுபாண்:217:8

‘வீந்தவர் என்பவர் வீந்தவ ரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே’ - கம்ப்வேள்வி: 30

‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு கெல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ - மணி:11:95-96

மாண்புடை யாளர், கேண்மையர், தத்தம்
வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர்,