பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

70 அ-2-19 ஈகை 23


பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்’ - அகநா:35:14-16

‘கறங்குமணி, வாலுளைப் புரவியொடு வையகம் அருள்
ஈர நன்மொழி இரவலர்க் கீத்த
அழல்திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரி’ - சிறுபாண்:91-95

‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையான்’ - நற்:170:6-7

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை’ - அகம்:209:12-13

4) அதியமான்: இவனுடைய முழுப்பெயர் அதியமான் நெடுமானஞ்சி என்பது. இவன் நெடுமான் என்றும், அதிகமான் என்றும், எழினி என்றும் அழைக்கப்பெறுபவன். இவன் தகடூரை (இற்றைத் தருமபுரி) ஆண்டவன். இவனது மலை குதிரை மலை. இவன் நீண்டநாள் வாழச்செய்யும் கருநெல்லிக் கணியினைத் தான் அருந்தாது ஒளவையார்க்கீந்து பெரும்புகழ் பெற்றவன். இவன் பெருவீரன். மழவர் எனப்பெறும் விர இனத்திற்குத் தலைவன். இவனைப் பாடிய புலவர்கள் ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார்.

‘பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கித் தனையே’ - புறம்:918-11

‘தென்னிலை மரபினின் முன்னோர் போல
ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்
.....................................................................................
அன்றும் பாடுநர்க் கரியை இன்றும்
பரணன் பாடினன் மற்கொள் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரணடு திகிரி யேந்திய தோளே' - புறம் :99:4,5, 11-14

'ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ