186
அ-2-19 ஈகை 23
கொள்ளவும். தொடங்கி விட்டன என்பதும் மறைக்க, மறுக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளாம், என்க.
- அவ்வாரியவில் கருத்துகளையெல்லாம் பொய்யும், புனைவும், கற்பனையும், ஏமாற்றும், மூடநம்பிக்கைகளும் கொண்டவை என்று கருதியும் ஆய்ந்தும் விலக்கியும், ஏற்கனவே மெய்யறிவியலும், பேரா இயற்கையாம்(370) பேரிறைமைப் பேருண்மையை நுண்ணிதின் உய்த்துணர்ந்து, தேர்ந்து தெளிந்த கொள்கையாகத் தமிழர்களிடத்துக் காழ்த்து வளர்ந்து விளங்கி நின்ற தமிழியல் கொள்கைகளை நிலைநாட்டியும் எழுதப் பெற்றதே இவ்வருந்திறல் பெருநூல் என்றுணர்க.
- இருப்பினும், அற்றை ஆரியப் பூசல்களால் கருத்திழந்து கலங்கி நின்ற மக்களிடை ஒரு சில உண்மைகளை அவர்கள் பாங்கிலேயே சென்று விளக்குவான் வேண்டியே மேலுலகக் கொள்கையையும் அதைச் சார்ந்த சில கருத்துகளையும் மிகுதேவையான இடங்களில் மட்டும் நூலாசிரியப் பெருமான் மேலோட்டமாக வைத்துப் பேசுவார்.
- அந்நிலையால் அவரின் காழ்த்துப் புலர்ந்து பொலிவுற்றுத் திகழும் அவரின் பேரறிவுக்கோ,நுண்மாண்துழைபுலம் மிக்க அவரின் இந்நூற் படைப்பிற்கோ வந்துற்ற இழுக்கு ஏதுமில்லை என்க. உலகியலும் மாந்தவியலும் மனவியலும் நுண்னிதின் உணர்ந்த திண்ணியராய் அவர் எண்ணியீன்ற இவ்வரும் பெரும் நூலுக்கு என்றும் எவரும் மருவும் மாசும் கற்பித்து விட முடியாதென்க.
- எனவே, இவ்விடத்து அம் ’மேலுலகம்’ என்னும் சொல்லை ஓர் இன்றியமைத் தேவைபற்றிப் பயன்படுத்தியுள்ளார் என்று உணர்ந்து கொள்க.
- அது வேதவியலில் சிற்சில விடங்களிலும் கதைகளிலும், ஈகைக்குரியர் அல்லாராகச் சிலர் குறிக்கப் பெற்று, அவர்கட்கு ஈதல் செய்யக்கூடாதென்றும், அவர்கட்கு ஈந்தால் அறப்பயன் விளையாது என்றும், எனவே அவர்கள் துறக்கம் (மேலுலகம் - விண்ணுலகம்) புகுதல் இயலாதென்றும் மனு முதலிய ’தர்ம’ நூல்களுள் கூறப்பெற்றுள்ளன.
- எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் காசிகாண்டச் செய்யுளைக் காண்க.
‘முகனெதிர் ஒன்றும் பிரியின்மற் றொன்றும்
மொழிபவர் விழைவுறு தூதர்,
அகன்றகேள் வியிலார் அருமருத்துவர்கள்
அரும்பொருள் கவருநர் தூர்த்தர்,