பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

அ-2-19 ஈகை 23



சில விளக்கக் குறிப்புகள்:

1) இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் : 'நான் இல்லாத ஏழையாக உள்ளேன்’ என்று தன்னிடம் உதவிக்கு வந்தவன், தன் துன்ப நிலையைக் கூறாத முன்பே குறிப்பறிந்தும், அவன் மற்றும் இதுபோல் இன்னொருவரிடம் போய் இரந்து கேளாத வாறும் அவனுக்குக் கொடுத்து உதவுதல்.

இலன் என்னும் எவ்வம் இல்லாதவன் எனும் துன்பம்.

எவ்வம் : துன்பம், இழிவு.

'நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்’ - 1045

'இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து’ - 1057

‘இன்மை இடும்பை' - 1063

‘இரப்பு இடும்பையாளன்’ - நாலடி:282:3

‘ஈயாய் எனக்கு’ என்று இரப்பானேல் அந்நிலையே
மாயா நோய் மாற்றிவிடின்' - நாலடி:307:2-3

‘எளியர் இவரென்று இகழ்ந்துரையார்’ - இனியவை:30

‘அகனமர்ந்து ஈதல்’ - 93

உரையாமை ஈதல் : உதவிக்கு வந்தவன், தன் துன்ப நிலையைக் கூறாத முன்பே குறிப்பறிந்தும், அவன் மற்றும் இதுபோல் இன்னொருவரிடம் போய் இரந்து கேளாத வாறும் அவனுக்குக் கொடுத்து உதவுதல்.

- இதற்கு உரையாசிரியர்கள் சிலர் இன்னொரு வகையாகவும் பொருள் உரைப்பர்.

- அஃதாவது, 'கொடுப்பவர் நிறைவாகக் கொடாமல், குறைவாகக் கொடுப்பின், பெற்றவர், 'அவரும் இல்லாதவர் போல் இருக்கிறது'. என்று பிறரிடம் போய் இழிவாகச் சொல்லாவாறு ஈதல் வேண்டும்’ என்பது.

- இவ்விடத்து 'எவ்வம்' என்பது இழிவைக் குறிக்கும்.

- எனவே இத்தொடர்க்கு மூன்று பொருள்கள் பெற வாய்ப்புண்டு. அவை:

1) இரப்பவன் 'தான் இல்லாதவன்' என்று தன் துன்பத்தைக் கூறுமுன் கொடுத்தல்.