பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

அ-2-19 ஈகை 23


210 அ-2-19 ஈகை 23

‘செல்வத்துப் பயனே ஈதல்’ - புறம்:189:7 ‘மல்லல்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் செல்வர் எனினும் கொடாதவர் நல்கடர்ந்தார்’ - நாலடி:296:1-2 ‘திருமகன் பெற்றெனச் செம்பொற் குன்றெனப் பெருநல நிதிதலை திறந்து பிடுடை இருநிலத் திரவலர்க் கார்த்தி இன்னணம் செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லுமே’ - சீவக:331

- என்றார் பிறரும். 3) ஈகையறம் பேணுபவன் பிறர் நன்மைக்கென மட்டும் அன்றித் தன்னுடைய உயிரின்பத்திற்காகவும் அதைச் செய்தல் வேண்டும் என்னும் சிறந்த கருத்தை, மனவியலடிப்படையில், இதில் எடுத்துக் கூறினார். அந்த இன்பத்தை உணராதவன், தான் அரிதின் பெற்ற பொருள் ஈட்டத்தைப் பேணி வைத்திருந்து, இறுதியில் இழந்துபோகும் துன்பத்தைப் பெறுவது வருந்தத் தக்கதே என்றார். 4) முன்னைய குறளில் பாத்துரண் மரீஇயவனைத் தீப்பிணி தீண்டாது என்று கூறியவர், இதில், அத்துடன் அவன் ஈதலின்பமும் பெறுவான் என்றதால், அதன் பின்னர் இஃது அடைவு கொண்டது, என்க.

உஉசு , இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல். – 229

பொருள்கோள் முறை

நிரப்பிய தாமே தமியர் உணல்,

இரத்தலின் மன்ற இன்னாது.

பொழிப்புரை: தாம் தேடித் திரட்டி நிரப்பிய பொருளைத் தாமே தமியராக உண்டது. தனக்கில்லை என்று இரந்து உண்பதை விட உறுதியாகக் கொடியது.

சில விளக்கக் குறிப்புகள்:

! நிரப்பிய தாமே தமியர் உணல் : தாம் தேடித்திரட்டி நிரப்பிய பொருளைத்

தாமே தமியராக உண்பது. * >

நிரப்பிய தாம் தேடித் திரட்டி நிரப்பிய பொருளை

தாமே தமியர் தாமே தமியராக தாமே தமியர் என்பதால், தானும் தன்