பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

213


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 213

- ஆனால், இரக்க வேண்டுமே என்பது தான், இல்லாமைக்குத் துன்பம்.

‘இன்மை இடும்பை இரந்துதிர் வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல்’ - 1063 மேலும், கேட்டபொழுது வைத்திருப்பவன் மறைத்து இல்லை என்று

சொல்வதும் அவனுக்குத் துன்பமே.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்’ - 1068

இருப்பினும், இத்துணைத் துன்ப நிலைகள் நேர்ந்தாலும், அவை வேண்டியவை கிடைத்த பின் மறைந்து விடும்; இன்டமே தோன்றும். . ஆனால், செல்வம் உடையவன் பிறர்க்கு வழங்காமல் அதனால் தானும் மகிழாமல், அச்செல்வம் எங்குத் தான் கையை விட்டுப் போய்விடுமே என்று வருந்திக் கொண்டிருக்கின்றானே, அதுதான் அந்த இரப்பவன் பெறும் துன்பத்தைவிட இன்னாதது; கொடியது; மிகுந்த துன்பம் தருவது, என்றார்.

“வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்

நல்குரவே போலும் நனிநல்ல’ - நீதிநெறி:66:1-2 ‘சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப்

பெரியவர் நல்குரவு நன்றே’ - பழமொழி:70 ‘வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார். - நாலடி:277:1

ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலில் பூவாமை நன்று’ நீதிநெறி:5:3-4

- என்றார் பிறரும்.

3) ஈத்துவக்கும் இன்பத்தை உணராதவராகித் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர் தன்மை முன் குறளில் கூறியவர், இதில் தாமே தமியராக உண்பர் தன்மையைக் கூறியதால், அதனை இது தொடர்ந்தது, என்க.

உங்0. சாதலின் இன்னாதது) இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை. - 230

பொருள்கோள் முறை:

சாதலின் இன்னாதது இல்லை; அது உம் ஈதல் இயையாக்கடை இனிது