பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அ-2-15 புறங்கூறாமை -19பிறர்க்கு எடுத்துச் சொல்வதும் ஒர் அறக்கடமையாக நூல்களுள் சொல்லப் பெற்றிருக்கிறது. (பார்க்க : ‘அறன் வலியுறுத்தல் அதிகார முன்னுரை).

- எனவே, எளிதாகிய அந்த அறக்கடமையைக்கூட ஒருவன் செய்யாமலிருப்பது ‘அறத் தவிர்ப்பு' என்னும் தவறு, குற்றம் ஆகும்.

‘அவன் அந்தத் தவற்றை அல்லது குற்றத்தைச் செய்யினும்' என்பதே ஆசிரியர் கூறவந்த கருத்து.

அத்துடன் இரண்டாவது தவறாக - அல்லது குற்றமாக ‘அறமல்லாததையும் அவன் செய்வதை' அடுத்த தொடரில் கூறுவார்.

2. அல்ல செயினும் - அறம் அல்லாதவற்றையே செய்பவனாகவும் (இருப்பினும்).

- அல்ல என்பதற்கு ‘அறம் அல்லாதவற்றை' என்பது முதல் தொடர் செயப்படு பொருளால் வருவிக்கப் பெற்றது.

- அறமல்லாதவற்றையே செய்வது அவன் செய்யும் இரண்டாவது அறத்தவிர்ப்பு அல்லது குற்றம் 'ஏ'காரம் பிரிநிலை; வருவிக்கப் பெற்றது.

3. புறங்கூறான் என்றல் இனிது - அவன் புறங்கூறாதவனாக இருக்கிறான் என்று சொல்லப் பெறுவது நல்லது.

என்றல் - என்று சொல்லப்பெறல்.

இனிது - நல்லது.

‘பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது' - 811
‘இகலின் மிக இனிது - 856

- என்னும் இடங்களில் 'இனிது நல்லது' என்னும் பொருளில் வந்தமை காண்க

4. ஒருவன் செய்யும் இரண்டு அறத்தவறுகளும் ஒர் அறச்செயலும் இங்குச் சுட்டப் பெறுகின்றன.

அவை : 1. அறத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் அவன் அதைப் பிறர்க்கு எடுத்துக் கூறுாமல் இருப்பது.

2. அறமல்லாதவற்றைச் செய்வது.

- ஆகியன அவன் செய்யும் தவறுகள் அல்லது குற்றங்கள் அல்லது அறக்கேடுகள்.