பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

அ-2-20 புகழ் -24


226 அ-2-20 புகழ் 24

  • * * * * * * * * 0 or * * * * * இசைபட வாழார்; முனியார்கொல் தாம்வாழும் நாள்’ - நாலடி:338 ‘தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப - மலைபடு:70 ‘இந்நிலத்து, மன்னுதல் வேண்டின் இசைநடுக நான்மணி:15:1-2 ‘இப்பால் உலகத்து இசைநிறீஇ’ - நான்மணி:27:4

7) புகழ்: வழக்கு புகழ்பெற்றவன் புகழுடையவன். விளக்கம்: புகழ் புகழப் பெறுதல். இதன் விளக்கம் முன்பே

தரப்பெற்றுள்ளது.

ஒருவன் மாந்தனாய்ப் பிறந்து ஏதோ ஒருவகையில் புகழ்பெறாதவனாய்

மாய்ந்து போதல், வெற்று வாழ்க்கை எனப் பெற்றது. - பொதுவான ஒருவன்கூட, தான் வாழ்கின்ற இடத்தைச் சுற்றிக் குறைந்தது. பத்துக் கற்கள் அளவிலாகிலும் புகழ் பெறுதல் சிறப்பு என்று கருதப்பெற்றது. ஒருவன் எவ்வளவுக் கெவ்வளவு மிக ஆழமாகவும் அகலமாகவும் புகழ் பெறுகின்றானோ, அவ்வளவின் அவன் சிறப்புடையவனாகக் கருதப் பெறுவான். - ஒவ்வொருவருக்கும் இரண்டு வாழ்க்கை ஒன்று ஊன் உடம்பில் வாழும் வாழ்க்கை இன்னொன்று அவன் மறைந்த பின் புகழுடம்பில் வாழ்வது

என்று கீழுள்ள சூளாமணிப் பாடல் கூறுகிறது.

‘ஒருவனது இரண்டு யாக்கை, ஊன்பயில் நரம்பின் யாத்த உருவமும் புகழும் என்றாங்கு ! அவற்றினூழ் காத்து வந்த மருவிய உருவம் இங்கே மறைந்து போம்! மற்ற யாக்கை திருவமர்ந்து உலகம் ஏத்தச் சிறந்துயின் நிற்கும் அன்றே! - சூளா, சீயவதை:204

‘பொன்றும் இவ்வுட லின்பொருட்டு)

என்றும் நிற்கும் இரும்புகழ்

இன்றி நீர்கழிந் தீர்களாற் . . . . - குன்றின் மேற்குடை வேந்திர்காள்! - சூளா.அரசியல்:226