பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

அ-2-20 புகழ் -24


244 அ-2:20 புகழ் 24

‘ஈகை'யதிகாரத்தை யடுத்துப் புகழ் அதிகாரம் வருவதால், ஈகையால் மட்டுமே புகழ் என்று கொண்டுவிடக்கூடாது. புகழ்’ என்பது பொதுவாகவே இங்குச் சுட்டப்பெறுகிறது. அதிகார முதற்குறள், ஈகையைக் கூறுவது, ஈகைக்குக் கொடுத்த சிறப்பேயன்றி வேறில்லை, 37f.

‘ஈகையால் புகழ்’ என்று கொண்டு, ஆற்றின் என்பதற்குச் செய்யின் என்று பொருள் கொண்டால் மட்டுமே, ஈகை புகழ் அறிவுப் புகழின் மேம்பட்டதென்று கொள்ளலும், அவ்வறிவுப் புகழை அஃதாவது ‘புலவரைப் புத்தேள் உலகம் போற்றாது என்று கூறலும் பொருந்தும். ஆனால் நூலாசிரியர் கருத்து அதுவாகக் கூறுவதில் சிறப்பில்லை.

‘ஈகைப் புகழ் அனைத்துப் புகழினும் சிறப்புடையதாகக் கொள்ளலாம். ஆனால், அதன் பொருட்டு, அறிவுப் புகழ்க்கு உரியவரான புலவரைக் குறைத்து மதிப்பிட்டு, அவரைப் புத்தேள் உலகம் போற்றிக் கொள்ளாது என்று தாழ்த்துவது, சரியில்லாததும், பொருந்தாதுமாகும். மேலும் நூலாசிரியர்க்குமே இழுக்குத் தருவதாம் என்க.

அறிவுடைமையில் மெய்யுணர்வும் - மெய்யறிவும் அடங்குவதாகும். உலக நடவடிக்கைகள் அத்தனைக்கும் அறிவே காரணமாக நிற்பது.

என்னை?

‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ - 421 அறிவுடையார் ஆவது அறிவார்’ - 427 அறிவுடையார் எல்லாம் உடையார்’ - 430 ‘அரும்பயன் ஆயும் அறிவினார்’ - 198 ‘மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்’ - 199 “மெய்ப்பொருள் காண்பது அறிவு’ – 355 ‘செம்பொருள் காண்பது அறிவு’ - – 358 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நனிய துடைத்து’ - 353

‘அறனறிந்து மூத்த அறிவுடையார்’ - 441

- என்று பலவாறுரைப்பார் ஆகலான்.

எனவே, அறிவுடையார், நீள் புகழ் பெறுவதே அவர்க்குற்ற பெருந்தகுதி என்னும் ஒர் உண்மையினையே ஆசிரியர், இக்குறட்பாவின் கண் வலியுறுத்த வந்தார் என்க. புலவரும் புகழ் பெறாவிடின் புத்தேள் உலகம் அவரைப் போற்றிக் கொள்ளாது என்பதே ஆசிரியர் கருத்தாதல் வேண்டும். அதற்குப் புகழ் பெறாத என்னும் பொருள் ஆற்றின்