பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

245


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 245

என்னும் சொல்லிலிருந்து பெறப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் அச்சொல், ஆற்றில் என்றிருத்தல் வேண்டும். ஆற்றில் .

ஆற்றாா, ஆற்றவியலாத ல் ‘ன்’ போலி. புலமை பெறுதலோடு அமையாது, அப்புலமையால் புகழ்பெறும்

செயல்களைப் புலவர்கள் செய்தல் வேண்டும். புலமை வேறு, புலமை புகழ்பெறும் செயல்களைச் செய்தல் என்பது வேறு. வெறும் புலமையே புகழ்பெறுதலுக்குக் காரணமாகி விடாது என்க. புலமை புகழ் பெறுதல், அதுகொண்டு செயற்கரிய செய்தல், நூலாசிரியரின் புலமையே இதற்குத் தக்க சான்றாம் என்று கருதி மகிழ்க

2) நிலவரை நீள்புகழ் ஆற்றில் புலவரை இவ்வுலக எல்லையின் அளவு,

நீண்ட புகழைச் செய்யாத அறிஞர்களை.

நிலவரை நீள்புகழ்: இவ்வுலக எல்லையின் அளவு நீண்ட புகழைச்

செய்யாத அறிஞர்களை.

ஆற்றில் புலவரை ஆற்றிலாத அறிஞர்களை செய்யாத அறிஞர்களை.

- புகழ் பெறாத புலவர்களைப் புத்தேள் நாடு, போற்றிக் கொள்ளாது என்பதால், அறிஞர்களும் ஏதோ ஒருவகையில் புகழ்பெறுதல் வேண்டும்.

3) புத்தேள் உலகு போற்றாது : தேவர் உலகம் என்று செல்லப் பெறுவது

போற்றிக் கொள்ளாது. - புத்தேள் உலகு தேவருலகம் என்று சொல்லப்பெறும் ஒரு கற்பனை நாடு. இது பற்றிய விளக்கத்தைக் குறள் எண்.38 இன் விளக்கவுரையில் காண்க)

புகழ் பெறாத எவரையும் புத்தேள் உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பதால் புகழ்த் தகுதி பெறப்பட்டது. : 4) புகழினது பெருமைச் சிறப்பு இதிலும் கூறப் பெற்றதால், இது

முன்னதைத் தொடர்ந்தது.

உங்ரு. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்(கு) அல்லால் அரிது. - 235

பொருள்கோள் முறை இயல்பு.