பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

அ-2-20 புகழ் -24


246 அ-2-20 புகழ் 24

பொழிப்புரை புகழ் ஆக்கம், அல்லது வளர்தல் போலவே, உருவாகி வளர்ந்து வரும் பல்வகைக் கேடும், அப் புகழ் முதிர்வடைந்து நிலை பெறுவது போலவே, உடல் முதுமையுற வருவதாகும் இறப்பும், மிகச் சிறந்த அறிவுத்திறப்பாடு உடையவர்க் கல்லால் தாங்கிக் கொள்ளுதல் அரிதாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

! இப்பாடலின்கண் ஆசிரியர் உலகியல் சார்ந்த சில அறிவியல்

உண்மைகளை மிகச்சிறப்பாக எடுத்துக் கூறுவர்.

மிகச் சில சொற்களால் நிறைந்த பேருண்மைகள்ை விளக்குவதால், பலருக்கும் பொருள் மயக்கம் ஏற்பட்டு உளது கவனிக்கத் தக்கது. இதில் தவிர்க்க வியலாதவாறு வடசொல் ஒன்று (வித்தகர்) ஊடுருவி நின்றுள்ளது.

இதில் உள்ள கருத்துக்கு எழுவாய் மூலமாகிய புகழ் என்னும் சொல் இக்குறளின்கண் பயன்படுத்தப் பெற இயலவில்லை. எனவே அச்சொல்லை அதிகாரத்தால் வருவித்துச் சொல்ல வேண்டியுள்ளது.

இதனுள் கூறப்பெறும் நுட்பமான கருத்துகள் மூன்று:

1) ஒருவர்க்குப் புகழ் ஏற்பட வேண்டுமெனில், அவரின் புகழ் முயற்சிக்

கிடையில் பலவகையான கேடுகள், துன்பங்கள் அவர்க்கு வரும்.

2 அவ்வாறு அவர் இறுதிவரை உழைத்தால்தான் அப்புகழ்ப் பெருமை

நிறைவு பெறும்; நிலைபெறும். - 3) இவ்வளவையும் தாங்கிக் கொண்டு செய்வதற்கு மிகச் சிறந்த அறிவுத்

திறப்பாடு:அறிவும், செயல்திறனும் அவர்க்கிருத்தல் வேண்டும். இம் மூன்று கருத்துகளையும் ஒன்பது சொற்களால் ஆசிரியர் விளக்கியுள்ளது, ஆசிரியரின் கூர்த்த அறிவையும், சிறந்த சொல்லாற்றலையும் காட்டுகிறது. புகழ் என்பது, ஈகை, கல்வி, அறிவு, தொண்டு, ஆட்சி, வீரம், கண்டுபிடிப்பு முதலிய பல்வேறு திறப்பாடுகளால் ஒருவர்க்கு ஏற்படுவதே பெருமை

- சிறப்பு - ஆகும்.

‘செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். . - 26 பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்’ - - 975

என்பார் ஆசிரியறாம்.