252
அ-2-20 புகழ் -24
252 அ-2-20 புகழ் 24
5. இது, நிலவரை நீள்புகழ், ஆற்றிலாப் புலவரை முன் பாடலில் கூறியவர், இதில், அத்தகு அறிவு வல்லவர், புகழ்பெறுதல் எத்துணை அரிது என்று கூறியதால், அதன் பின் இது வைக்கப் பெற்றது, என்க.
உங்க, தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - 236
பொருள்கோள் முறை இயல்பு.
பொழிப்புரை ஒருவர் உலக மக்களிடத்துத் தாம் விளங்கித் தோன்ற விரும்பினால், தம்மை அவர்கள் புகழ்கின்ற வகையில் விளங்கித் தோன்றுக அவ்வாறு இல்லாதவர்கள் (தம்மை அவர்கள் இகழ்கின்ற வகையில் அறிமுகம் ஆவதை விட அவ்வாறு தோன்றாமல் இருப்பதே நல்லது.
சில விளக்கக் குறிப்புகள்:
1) தோன்றின் : ஒருவர் உலக மக்களிடத்துத் தாம் விளங்கித் தோன்ற
விரும்பின். w
தோன்றுதல் விளங்கித் தோன்றுதல். தோன்றுதல் பிறத்தலையும் குறிக்கும்மேனும், இங்கு அதைக் குறியாது.
பிறரிடத்து விளங்கித் தோன்றுதலையே இங்குக் குறித்தது. என்னை?
தோன்றின் - தோன்றுதல், காணப்படுதல்.
உட்பகை தோன்றின் - (884) (885) நலத்தின்கண் நாரின்மை தோன்றின் - (958) தோன்றிவிடும்’ - (1253)
2) புகழொடு தோன்றுக தம்மை இவ்வுலக மக்கள் புகழ்கின்ற வகையில்
விளங்கித் தோன்றுக - புகழொடு இவ்வுலக மக்கள் புகழ்கின்ற தன்மையோடு, - தோன்றுக அவர்களின் முன் விளங்கித் தோன்றுக
ஏதோ ஒருவகையில் பிறர் மதிக்கத்தக்க, பெருமையாக நினைக்கத் தக்க
வகையில் புகழ்பெற்று விளங்குக. . உலகில் பிறந்து, தம் அரிய செயலாலும், அறிவாலும், ஈகையாலும் பிறவற்றாலும் முயன்றுதான் புகழ்பெற முடியுமே தவிர, புகழ்பெறுவதற்கென்றே பிறத்தல் இயலாது. பிறவி, இயற்கையின்