பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

அ-2-20 புகழ் -24


254 அ-2-20 புகழ் 24

பழித்ததுமே யன்றி வேறல்ல என அறிக என்று கூறி அமைவு செய்வார்.

. இக்குழப்பம், தோன்றுதல் தோன்றாமை என்னும் சொற்களுக்குப் ‘பிறத்தல் பிறவாதிருத்தல்’ என்று பொருந்தாத பொருள்களைக் கண்டதால் வந்த இடர்ப்பாடே என்க. தோன்றல், தோன்றாமை இரண்டிற்கும் விளங்கித் தோன்றுதலும், தோன்றாமையும் என்னும் பொருளில், பிறரும் ஆண்டுள்ளது காண்க

“ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை

சென்றுநின் றோர்க்கும் தோன்றும்’ - புறம்:114:1,2 ‘வான்தோய் சிமையம் தோன்ற லானே - அகம்:378:24 ‘முள்துனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கி - கலி:142:7 ‘துய்க்கும் இடத்தச்சம்; தோன்றாமைக் காப்பச்சம்’ - நாலடி:83:2

4) முன்னவற்றுள் புகழ்ச் சிறப்புக் கூறியவர், இதனுள் புகழ்பெறுவார் சிறப்பும் சிறப்பின்மையும் கூறியதால் அவற்றின் பின் இஃது இடங்கொண்டது.

உங்.எ. புகழ்பட வாழாதார் தம்நோவார்

இகழ்வாரை நோவது எவன். - 237

பொருள்கோள் முறை இயல்பு.

பொழிப்புரை. நற்செயல்கள் செய்து, பிறர் தம்மைப் புகழ்ந்துரைக்குமாறு வாழ இயலாதவர், அவ்வாறு இயலாமைக்குத் தம்மை நொந்து கொள்ளாமல், பிறர், தம்மை இகழ்வதற்காக, அவர்களை நொந்து கொள்வது எதனால்?

சில விளக்கக் குறிப்புகள்:

| புகழ்பட வாழாதார் தம்நோவார். நற்செயல்கள் செய்து பிறர் தம்மைப்

புகழ்ந்துரைக்குமாறு வாழ இயலாதவர், அவ்வாறு இயலாமைக்குத் தம்மை நொந்து கொள்ளாமல். .

- புகழ்பட வாழ்தல், தம் தம் அருஞ்செயல்களால் ஆவதேயன்றித் தாமே நிகழ்வதன்று. எனவே, எந்த நற்செயலும் செய்யாமல் புகழ் பெறுதல் இயலாது. எனவே புகழ்பெறும்படி நற்செயல் ஏதும் செய்யாமைக்குத் தாமே காரணம் என்று தம்மை நொந்து கொள்வதே தக்கது.