பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அ-2-16 பயனில சொல்லாமை 20


சில விளக்கக் குறிப்புகள் :

1) பல்லார்முன் பயனில சொல்லல் : பயனில்லாதவற்றைப் பலரிடமும் சொல்லித் திரிவது.

பல்லார்முன் - என்பது முன்னைய குறளிலேயே விளக்கப்பெற்றது. இங்கும் பலதரத்து மக்களிடையே என்னும் பொருள் பொருந்தும்.

2) நட்டார்கண் நயனில செய்தலின் தீது : ஞாயமில்லாதவற்றை நண்பர்களிடம் செய்வதைவிடத் தீமை பயப்பதாகும்.

நட்டார்கண்: நட்புக் கொண்டவர் இடத்து.

நயனில - ஞாயம் இல்லாத வற்றை

நயன் - ஞாயம் (நீதி)

'நயன் சாரா' - (194)

'நயனில சொல்லினும்’ - (197)

'நயனுடையான்’ - (216, 219)

'நயன் தூக்கி’ . - (912)

- என்னும் இடங்களிலெல்லாம் ஞாயத்தை நடுநிலையை - நீதியையே குறித்தது என்க.

- 'நயனில’ என்பதற்கு இவ்விடத்தில் மணக்குடவரும், பரிமேலழகரும், பாவாணரும் 'விருப்பமில்லாத' என்னும் பொருளையே தருகின்றனர். அது பொருந்தாது.

- நண்பர் விரும்பாததைச் செய்வது தீது என்று சொல்ல முடியாது. அவர் விருப்பம் தீதாகவும் இருக்கலாம் ஆகலின்.

- எனவே, நண்பரிடத்து ஞாயமில்லாதவற்றைச் செய்வதுதான் தீதாக இருக்க முடியும்

3) இக்குறளில் இரண்டு தீமைகள் குறிக்கப் பெறுகின்றன. ஒன்று - பயனில பல்லார்முன் சொல்லுதல்.

இரண்டு - நயனில நட்டார் கண் செய்தல்.

- இந்த இரண்டு தீமைகளிலும் 'பயனில பல்லார்முன் சொல்லுதல்' பெரிய தீமை என்கிறார், ஆசிரியர். இஃது எப்படி என்று ஆய்தல் வேண்டும்.

- நயன் (ஞாயம்) இல்லாத வற்றை நண்பர்களிடம் செய்வது நண்பர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல்களாகக்கூட இருக்கலாம். அல்லது