பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அ-2-16 பயனில சொல்லாமை 20


பின்னர்தான், அறிவு தன் அறியாமை இருளை நீக்குகிறது என்பது மெய்யறிவினார் கருத்து. என்னை?

'அவா இல்லாக்கு இல்லாகும் துன்பம்’ - 368

‘இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்' - 359

‘பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
...................................................மருள்’ - 351

‘இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு’ - 352

'பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
....................................................மருள்’ - 1007

- என்பார் ஆகலின்,

- மனத்தின் மருள் தீர்ந்த பின்னர்தான் மாசறு காட்சி (அறிவு தோன்றும் என்பர் நூலாசிரியர்.

(காட்சி - அறிவு என்பது குறள் 174-இல் விளக்கப் பெற்றது. விளக்கம் ஆண்டுக் காண்க)

- மருள் தீர்ந்த பின்னரே மாசறுகாட்சி ஏற்படும் என்றார், என்க.

‘மருளறு சிறப்பின்' - தொல் : 1230

'தெருளநின் வரவு அறிதல்
மருளது தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே’ - பரி: 1: 32-33

‘மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவன்' - கலி: 103: 57.

‘மருளும் உளப்பட வாழ்நர்க்கு' - புறம் : 28 : 3

‘மருளறு புலவ’ -மணி : 9 : 33 .

- தீர்ந்த - நீங்கிய

'பொய்மையும் வாய்மை யிடத்து புரைதிர்ந்த
நன்மை பயக்கும் எனின்' - 292

- மாசறு - குற்றமற்ற - (352,649,956)

- மாசு - குற்றம். - (34, 278, 601)

2) பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்: பொருட்பயன் நீங்கிய சொற்களை மறதியாகவும் சொல்ல மாட்டார்.