பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

65



பொருள் தீர்ந்த :பொருட்பயன் நீங்கிய சொற்களை.

- சொற்கள் அதிகாரத்தால் வருவிக்கப் பட்டது.

தீர்தல் - நீங்குதல்

பொச்சாந்தும் - மறதியாகவும், மறந்தும்.

பொச்சாப்பு - மறதி

(54 - ஆம் அதிகாரம் காண்க)

பொச்சு ஆப்பு - பொச்சாப்பு.

பொள் - பொய் - பொய்ச்சு - பொச்சு.

பொள் - தொளை.

- உள்ளீடிருந்து இல்லாமற்போனது.

- வினையால், இருந்து இல்லாமற் போன மறதியைக் குறித்தது.

(எ-டு) காய்தல் - சூடு ஏறுதல்.

காய்வு : எரிவு, எரிச்சல், முனிவு. வெறுத்தல் வினையால் வேறுபொருள் குறித்து.

ஆப்பு - ஒரு சொல்லிறு.

(எ-டு) பொல்லாப்பு, அங்காப்பு, விடாய்ப்பு, மறியாப்பு, கொண்னாப்பு.

மறியாப்பு, கொண்னாப்பு இருசொற்களும் பழந்தமிழ்ச் சிற்றுார்ப்புற வழக்கு கொங்கு நாட்டினது.

வழக்கு : குட்டி, வயிற்றில் மறியாப்பாக (குறுக்காக)க் கிடக்கிறது.

- திருவிழா வருகிறது. உங்களுக்கெல்லாம் கொண்னாப்புத்தான். (கொண்டாட்டம்தான்)

'கையாறு இடுக்கண் பொச்சாப்பு பொறாமை' - தொல் : 1206 : 6:

‘வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை' - தொல் : 1220 :2

'பொச்சாப்பு இலாத புகழ்வேள்வி' - கார் : 7 : 3

'மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்' - திரி.கடு. 30:2

'பொச்சாப்புக் கேடு' - சிறுபஞ்ச : 48:135

'கொடையளிக் கண் பொச்சாவார்’ ஆசாரக் : 66: 2

'பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்’ - நாலடி : 182

'பெறுதிக் கண் பொச்சாந்து உரைத்தல்' - திரிகடு : 91: 1

'அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்' - பழமொழி:288:2