பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

91பொழிப்புரை: துன்பந்தரும் கேடுகள் தன்னை வந்து வருத்துவதை விரும்பாதவன், தீமையான செயல்களைத் தானும் பிறர்க்குச் செய்யாதிருப்பானாக

சில விளக்கக் குறிப்புகள்:

1) நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் : துன்பந்தரும் கேடுகள் தன்னை வந்து வருத்துவதை விரும்பாதவன். நோய்ப்பால : துன்பம் தரும் கேடுகள்

- பால - பாற்பட்டவை. துன்பத்தின்பாற் பட்டவை. - அஃதாவது பலவகையான கேடுகள்.

'நோய்ப்பால' என்பதற்குப் பரிமேலழகர் பாவங்கள் என்று கூறுவது மதம்.

அடல் - தாக்கம், வருத்தம் - வருத்துவதை, தாக்குவதை வேண்டாதான் - விரும்பாதவன்.

- தமக்குக் கேடுகள் வரவேண்டுமென்று யாரும் விரும்பமாட்டார்.

- அவ்வாறானவன்.

2 தீப்பால தான் பிறர்க்கண் செய்யற்க : தீமையான செயல்களைத் தானும் பிறர்க்குச் செய்யாதிருப்பானாக

தீப்பால : தீமையான செயல்களை.

செய்யற்க :செய்யாதிருப்பானாக - தான் செய்தால் அதற்கு எதிராகப் பிறரும் தமக்குச் செய்யலாம் அல்லது அரசால் தண்டிக்கப்படலாம் என்றுணர்தல் வேண்டும்.

- என்னை ?

‘குடிபுறங் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்' அரசின் கடமையாகலின், பிறர்க்குத் தீமை செய்வார் தண்டிக்கப் பெறுதல் இயல்பாம் என்க.

3) தீய செயல்களைப் பிறர்கண் செய்யாதொழிக என்று கூறுதல் நிலையில், தனக்கு வரும் துன்பங்களைத் தவிர்த்தற் பொருட்டேனும், பிறர்பால் தீயவை செய்யற்க என்றதால், முன்னதனை அடுத்து இது நின்றது.


உ0எ. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வியாது பின்சென்று அடும். - 207

பொருள்கோள் முறை: இயல்பு