பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருக்குறள் வசனம்

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு பறவைக்கும் முட்டைக்கும் உள்ள தொடர்பு போன்றது. முட்டையை விட்டுப் பறவை வெளியே வந்ததும் அதனை விட்டுப்போவது போன்று உயிரும் உடலை விட்டுச் சென்றதானுல் மீண்டும் அவ்வுடலில் வந்து புகுவதில்லை. உயிர் அறிவாகியும் அரு வாகியும் கித்தியமாகியும் உள்ளது. உடல் அறியாமையு மாகியும் உருவாகியும், அகித்தமாகியும் உள்ளது. ஆகவே இாண்டிற்கும் நட்புக் கிடையாது. வினே காரணமாக இவ் விாண்டும் ஒன்று பட்டன. தீவினை குறைந்த பின் இரண்டும் பிரிந்துபோக வல்லன. இறப்பு உறங்குவதற்கு ஒப்பு, பிறப்பு உறங்கி விழிப்பதற்கு ஒப்பு. உறக்கமும் விழிப்பும் மாறி வருவது போன்று, இறப்பும் பிறப்பும் மாறி மாறி வர வல்லது. உடம்பு, வாதம், பித்தம் சிலேத்துமம் ஆகிய நோய்கட்கு இருப்பிடம். ஆனல் உயிர்க்கு மட்டும் என்றும் நிலத்திருத்தற்குரிய பொருளாக மட்டும் அமையவில்லை. எப்போதாகிலும் உயிர் வெளி ஏறி விடுவது உறுதி. இதனே அறிந்து அவ்வுயிர் உள்ளபோதே செய்யக் கடவதான அறச் செயல்களைச் செய்தல் வேண்டும். 2. துறவு

துறவு என்பது உடம்பினிடத்தும் செல்வத்தினிடத்தும் வைத்த பற்றைத் துறத்தலாம். ஐம்பொறிகளால் இன்புறும் பொருள்களிடத்து வைத்த ஆசையைத் துறந்தால், அவ் வைம்பொறிகளால் அனுபவிக்க வல்ல பொருள்களால் னக் காலத்திலும் துன்பம் என்பது ஏற்படாது. அவ்வாறு ஆசையை ஒழித்திலோம் எனில், அப் பொருள்களைக் தேடுதலாலும், காப்பாற்றுதலாலும், இழத்தலாலும், வரும் இம்மைத் துன்பமும் மறுமையில் வரும் பாவத் துன்பக் கையும் காம் அனுபவித்தே ாேவேண்டும். ஆகவே எப்