பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24 திருக்குறள் விளக்கு

குரல் அ: அழுக்காறுடையவன் தன்னிடம் உள்ள பொருளையும் இழந்து வறுமையில் ஆழ்வான் என்ற உண்மையையே இப்படி நாடகக் காட்சிபோல வைத்துச் சொல்கிறார் வள்ளுவர். அவர் பாட்டைக் கேட்கலாம்.

வேறு குரல் : (பாடுகிறது.) அவ்வித்து

அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.

அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்


குரல் ஆ : நல்ல கவிச் சித்திரம் நுட்பமான பண் பைத் திட்பமான பாத்திரங்களைக் கொண்டு ஒரு காட்சியைப்போல அமைத்துக் காட்டும் இதன் அருமை போற்றத்தக்கதே.

(மாற்றம்.) ×

குரல் அ : இன்னும், சொல்லும் பாணியிலே, கேட் பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் ஒன்றைச் சொல்வதும் கவிஞனுடைய உத்திகளில் ஒன்று.

குரல் ஆ : அதற்கும் குறளில் உதாரணம் உண்டு அல்லவா? - -

குரல் அ: அதைத்தான் சொல்ல வருகிறேன். அழுக்காறு என்னும் பொறாமையைத் திருவள்ளுவர் வெறுக்கிறவர். அப்படியே வறுமையையும் வெறுக்

1. குறள், 167.