பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 25

கிறவர். இந்தக் கருத்தைத் தமிழ்த் தாத்தா டாக்டர் சாமிநாத ஐயரவர்கள் எப்படிக் கூறுகிறார் தெரியுமா ?

வேறு குரல் : புலவர்மாட்டு இத்தகைய பேரன்புடைய பெரியார் அப்புலவர்பால் வறுமை குடிகொண்டிருத் தலை அறிந்து மிக வருந்தி இரங்குகிறார்.

பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினே

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு' -

என்பதில் வறுமையானது அறிவுடையார் அவ்வறி வினையும் மறந்து ஒழுகச் செய்யும் கொடுமையை உடையது என்பதைக் குறிப்பிடுகின்றார். புலவர் கள் இங்ஙனம் இருக்கும் உலக இயல்பை, '

"இருவே றுலகத் தியற்கை; திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு” 

என்று நொந்து கூறுகின்றார். அத்தகைய புலவர் களை இரந்துண்டு வாழவைத்த கொடுமையால்,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து

கெடுக உலகு இயற்றி யான்' -


என்று பிரமனுக்குச் சாபம் கொடுக்கிறார். இவருடைய வெறுப்பு முழுவதும் சேர்த்து, 'இன்மை என ஒரு பாவி' என்று வையும் பாட்டில் வெளிப்படு கின்றது. --

- வறுமையைப் பாவி யென்று வைத்து போலவே அழுக்காற்றையும் பாவியென வெறுக்கின்றார்.

1. குறள், 532. 2. குறள், 374, 3. குறள், 1062. 4. குறள், 1042.