பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 109

முத்திரை மோதிரம் இட்டிருக்கின்ற நின் கையைக் காட்டுவாயாக பெரிய வளையல்களனிந்த நின்னுடைய முன் கையினைக் காட்டுவாயாக. அழகிய கடகம் புனைந்த நின் கையைக் காட்டுவாயாக. பொன்னாலான அழகிய நெளி இட்டிருக்கும் நின் கையைக் காட்டுவாயாக வேலைப்பாட மைந்த சூடகம் இட்ட நின் கையினைக் காட்டுவாயாக சக்தி பீடமாகிய இக்குற்றாலத்துக்கு இறையவரான குற்றால நாதரின் நல்ல நகருக்குள்ளே வந்து பிறந்துள்ள சஞ்சீவி போன்றவளே! நின் கையை என்னிடம் காட்டுவாயாக

இராகம் - கல்யாணி - தாளம் - சாப்பு கண்ணிகள் முத்திரைமோ திரம்இட்ட கையைக் காட்டாய் அம்மே - முன்கை மூதாரி இட்ட கையைக்காட்டாய் 1

அத்தகட கம்புனைந்த கையைக்

காட்டாய் பொன்னின்

அலங்கார நெளியிட்ட கையைக் காட்டாய் 2 சித்திரச்சூடகம்இட்ட கையைக் காட்டாய் பசும்

செங்கமலச் சங்கரேகக் கையைக் காட்டாய் 3 சத்திபீ டத்திறைவர் நன்னகர்க்குள்ளே வந்த சஞ்சீவி யேஉனது கையைக் காட்டாய். 4

(மூதாரி - பெரிய வளையல். முத்திரை மோதிரம் அடையாள மோதிரம். அத்த கடகம் - பொற்கடகம். நெளி - விரலணிகளுள் ஒன்று; தற்காலத்தே நெளிவு என்பார்கள். சிவந்த உள்ளங் கையிலே விளங்கும் வெண்மையான கை ரேகைகளைக் குறிக்கச் “செங்கமலச் சங்கரேகை என்றனர். சஞ்சீவி உயிர் பிழைக்கச் செய்யும் மூலிகை)

22. கவிஞர் பேசுகிறார்

உமையம்மையைத் தன் ஒரு பாகத்திலே கொண் டிருப்பவர்; தம் சிவந்த கையிலே மழுவாயுதத்தைத் தரித் திருப்பவர் குற்றாலநாதர்.அவருடைய மலைச்சாரலினைத்தன்