பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 1 11

இராகம் - பைரவி தாளம் - ரூபகம் கண்ணிகள் மாறாமல் இருநிலத்தில் அறம் வளர்க்கும் கையே! மனையறத்தால் அறம்பெருக்கித் திறம் வளர்க்கும் கையே! 1 வீறாக நவநிதியும் விளையும் இந்தக் கையே மேன்மேலும் பாலமுதம் அளையும் இந்தக் கையே 2 ஆறாத சனங்கள்பசி ஆற்றுமிந்தக் கையே அணங்கனையார் வணங்கிநித்தம் போற்றும் இந்தக் கையே 3 பேறாக நன்னகரங் காக்கும் இந்தக் கையே பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்தக் கையே. 4

(மாறாமல் - எக்காலத்தும் தர்மம் சிதையாமல், திறம் - வளமைச்சிறப்பு. பாலமுதம் - பாற்சோறு. வீறு - மேன்மை)

24. மகராசி நீயே! அம்மையே! நின்னுடைய கையிலே தோன்றுகின்ற குறியினைப் பார்த்தால் இந்தக் கையைப் பிடித்து மண வாளராக வருபவர், தாம் எட்டுத் திசைகளையுமே தமக்குச் சொந்தமாக உடையவராவர் என்றே சொல்லலாம். நீயோ இந்த உலகம் முழுமைக்குமே பேரரசியாகத் திகழ்பவளாவாய். இந்தக் குறி ஒருபோதும் பொய்யாகவே போகாது என்று சொல்லினாள் குறவஞ்சி அதனையடுத்து அவள் இறைவரின் திரிகூடத்திலே வாழும் உண்மையான குறப்பெண் தெய்வங் களையெல்லாம் காண்பவர் வியப்புற்று நிற்க வணங்கு வாளாயினாள்.

விருத்தம் - கைக்குறி பார்க்கில் இந்தக் கைப்பிடிப்ப பவர்தாம் எட்டுத் திக்குமே உடையார் ஆவர் செகமக ராசி நீயே இக்குறி பொய்யாதென்றே இறையவர் திரிகூடத்தில் மெய்க்குற வஞ்சி தெய்வம் வியப்புற வணங்குவாளே.

25. தெய்வ வணக்கங்கள் குழல்வாய் மொழி அம்மையினைத் தம்முடைய இடது பாகத்திலே கொண்டவரான குறும்பலா நாதருடைய அழகிய