பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 125

தலைதனில் பிறையார் பலவினில் உறைவார்

தகையினை வணங்கார் சிகைதனைப் பிடித்தே .பலமயிர் நறுக்கிச் சிலகண்ணி முறுக்கிப்

பறவைகள் படுக்கும் குளுவனும் நானே! 3 ஒருகுழை சங்கம் ஒருகுழை தங்கம்

உரியவிநோதர் திரிகூட நாதர் திருநாமம் போற்றித் திருநீறு சாத்தும்

திரிகூட நாமச் சிங்கனும் நானே. 4

(புறவு-காடு. படுக்கும் - அகப்படுத்தும், பிடிக்கும். தவில் - முழவு வகை. கின்னரம் - யாழ்வகை. சிகை - குடுமி. ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர்” அர்த்தநாரீசுரராகிய சிவ பெருமான். விநோதர் - வியப்பான அமைதியினை உடையவர்.) -

7. நூவன் வந்தான்!

தாருகாவனத்து முனிவர்கள் ஏவிவிட்ட புலியினைக் கொன்றும், அத்துடன் தக்கன் யாகத்திலே வந்த சந்திரனை வலியழித்தும், அம் முனிவர்கள் ஏவிய போர்க்குணம் மிகுந்த மதயானையையுங் கொல்லும் ஆற்றல் மிகுந்தவர் திரிகூடநாதர். அவருடைய திரிகூட மலைச்சாரலிலே மதங் கொண்ட புலபோல வந்துகொண்டிருந்த சிங்கனுக்கு முன்பாக, வஞ்சப் பேச்சும் கதையும் பேசிக் கொண்டே தன் கையிலே ஈட்டியினைத் தாங்கிக் கொண்டு எலிகளைத் துரத்திக் கொண்டிருக்கும் வீரனாகிய ஈப்புலி’ என்ற கேலிப் பெயரினையுடைய நூவன் என்பவனும் வந்து கொண்டிருந்தான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் புலியொடு புலியைத் தாக்கிப் -

போர்மத யானை சாய்க்கும் வலியவர் திரிகூடத்தில்

மதப்புலிச் சிங்கன் முன்னே