பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 139

தானிகன் சர்க்கரைப் பண்டாரம் என்னும்

தணியாத காதற் பணிவிடை செய்கின்ற மேன்மை பெருஞ்சுந் தரத்தோழன் கட்டளை

மிக்க கருவைப் பதிராம நாயகன் நானில மும்புகழ் தாகந்தீர்த் தானுடன்

நல்லூர் வருசங்கரமூர்த்தி கட்டளை ஆன சடைத்தம்பி ரான்பிச்சைக் கட்டளை

அப்பால் மலைநாட்டார் கட்டளைப் பற்றெல்லாம். (மே)

13. சிங்கியை நினைந்தான்! கண்டக சேதனன் என்பவன் ஒரு செட்டி அவனுடைய வேண்டுதலுக்காக இரக்கங் கொண்டு அவனுடைய துயரத்தைத் தீர்த்தருளியவர் குற்றாலநாதர். அவருடைய மலைச்சாரலிலே, நெத்திச் சுட்டிக்கு ஒத்த அழகுடன் விளங்கும் நெற்றியினையுடைய அழகியாள் என் சிங்கி, அவளுடைய கொங்கைகளின் மேல் முட்டிக் கிடந்து கொஞ்சி, முத்தங்களிட்டுச் சேர்ந்து, நன்றாகக் கட்டிக் கிடப்பதற்கு, அவளுடைய பிரியா முலைக்கச்சாக நான் கிடக்கப் பெற்றேனில்லையே!

கொசசகக் கலிப்பா செட்டிக் கிரங்கிவினை தீர்த்தவர்குற் றாலர்வெற்பிற் சுட்டிக் கிணங்குநுதுற் சுந்தரியாள் கொங்கையின்மேல் முட்டிக் கிடந்து கொஞ்சி முத்தாடிக் கூடிநன்றாய்க் கட்டிக் கிடக்க முலைக் கச்சாய்க் கிடந்திலனே.

14. கண்ணி கொண்டு வா!

அடே குளுவா! கண்ணியை இங்கே எடுத்துக் கொண்டு வாடா! கண்ணியை எடுத்துக்கொண்டு வாடா! நம் தலைவராகிய குற்றாலநாதரின் கார்மேகங்கள் நிறைந்துள்ள திரிகூடமல்ைச் சாரலிலே, நாம் பண்ணிய புண்ணியங் களுக்கான பலன் எல்லாம் ஒருமிக்க வந்து வாய்த்தன போலே, பறவைகள் எல்லாம் பரவி இரைகளை மேய்ந்து கொண்டிருக்