பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்

கொச்சகக் கலிப்பா

ஆணாகிப் பெண்விரகம் ஆற்றாமற் போனசிங்கன் பூணாகப் பாம்பணிவார் பொன்னகர்சூழ் நன்னகரின் சேனார் பெருந்தெருவிற் சிங்கியைமுன் தேடிவைத்துக் காணாமற் போனபொருள் கண்டவர்போற் கண்டானே.

(பொன்னகர் - தேவலோகம். சூழ்தல் - நினைத்தல். சேண் - நெடிய)

40. இருவரின் சந்திப்பு குளிர்ச்சி வாய்ந்த சந்திரனைச் சடையிலே சூடியவர் குற்றாலநாதர். அவருடைய திருநாட்டிலே சிங்கன் சிங்கி யாகிய இருவரும் தம்முள் கண்டபோது கடலானது பெருகிக் கட்டுக்கடங்காமற் போகும்போது, இடையிலே கரையானது நின்று தடுத்துக் காப்பதுபோல, அவர்களுடைய கட்டுக் கடங்காத காதலால் ஒன்று சேர விரையும் போது, தெருவின் நினைவு வந்து குறுக்கிட்டு, அவர்கள் ஆர்வத்தைத் தடுத்து நின்றது. அதனால் வெட்கங்கொண்டவளாகி நின்ற குறும்புப் பேச்சுக்காரியான சிங்கியைக் கண்ட சிங்கனும், தமயந்தி யிடத்திலே, தூது சென்ற நளனைப் போல மயங்கி நின்றான். சிங்கியும் கன்னி மாடத்திலே விளங்கிய தமயந்தியைப் போன்றவளாயினாள்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சீதமதி புனைந்தவர்குற் றாலநாதர்

திருநாட்டில் இருவருந்தாங் கண்ட போது காதலெனும் கடல்பெருகித் தரிகொள் ளாமற்

கைகலக்கும் போதுகரை குறுக்கிட் டாற்போல் வீதிவந்து குறுக்கிடவே நாணம் பூண்ட

விண்ணாணச் சிங்கிதனைக் கண்டு சிங்கன் தூதுவந்த நளனானான் கன்னி மாடந்

துலங்குதமயந்தியவ ளாயி னாளே. (சீதம் - குளிர்ச்சி. கைகலக்கும்போது - ஒன்று சேரும் போது)