பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள்

வாரெவர் சிங்கி! நீதான் பாடிக்கொண்டாற்போதும் ஆடிக்கொள்

வேண்டா சிங்கா! 19

பார்க்கப் பொறுக்குமோ பாவியேன் ஆவிதான் சிங்கி! முன்னே ஆக்கப் பொறுத்தவர் ஆறப்

பொறார்களோ சிங்கா! 2O

45. வாழ்த்து புலவர்களே! சுற்றாத ஊர்கள்தோறும் போய் வீணாகச் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டாம். குற்றாலம்’ என்று ஒருமுறை நீங்கள் மன ஒருமையுடன் சொல்வீர்களே யானால், வற்றாத வட வருவியினை உடைய அவனே, மறுபிறவியாகிய சேற்றிலே கிடந்து துயரங்கொள்ள நம்மை மீண்டும் பிறக்குமாறு செய்ய மாட்டான்.

நேரிசை வெண்பா சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண் டாம்புலவீர் குற்றாலம் என்றொருகாற் கூறினால் - வற்றா வடவருவி யானே மறுபிறவிச் சேற்றில் நடவருவி யானே நமை.

46. வாழ்த்துகின்றேன்! வெற்றி பொருந்திய மதியணியும் சடையினை உடைய வனை, குறும்பலா மரத்தின் அடியிலே கோவில்கொண்டு எழுந்தருளி இருக்கும் இறையவனை, வெற்றிச் சிறப்புடைய மழுப்படையினை ஏந்தியிருப்பவனை, ஆனேற்றிலே ஊர்ந்து வருபவனை வாழ்த்துகின்றேன்!

தனக்கொரு தந்தையில்லாத திருமகனைப் பெரிய மலையரசாகிய இமவானுக்கு மருமகனை, வேதங்கள் முழங்குகின்ற சங்கவீதியினை உடையவனை, வேதியனாகிய சிவபெருமானை வாழ்த்துகின்றேன்!