பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருக்குற்றாலக் குறவஞ்சி மூலமும் உரையும்

மதயானையின் தோலை உரித்தவனை, மூன்றாம் பிறையினைச் சடையிலே தரித்தவனை, வடவருவித் துறை யினை உடைய குற்றாலத்திலே கோவில் கொண்டிருப்பவனை, வேதங்களின் உட்பொருளாகிய இறையவனை வாழ்த்து கின்றேன்.

மறைகளை ஆதியிலே அருளிச்செய்த முதல்வனை, அனைத்து உயிர்களுக்கும் முற்பட்டவனை, குழல்வாய் மொழி அம்மையாருடன் சேர்ந்திருக்கும் மன்னவனை வாழ்த்துகின்றேன்.

கண்ணிகள் கொற்றமதிச் சடையானைக்

குறும்பலா உடையானை வெற்றி மழுப் படையானை

விடையானை வாழ்த்துகிறேன் 1 தாதையிலாத் திருமகனைத்

தடமலைக்கு மருமகனை வேதசங்க வீதியனை

வேதியனை வாழ்த்துகிறேன். . 2 தந்திமுகத் தொருகோனைத்

தமிழிலஞ்சி முருகோனை மைந்தரெனும் இறையோனை

மறையோனை வாழ்த்துகிறேன் 3 தீமுகத்திற் பறிகொடுத்த

திருமுடிக்கா ஒருமுடியை மாமனுக்கு வரிசையிட்ட

மாமனை நான் வாழ்த்துகிறேன். 4 காமனுக்கும் பூமனுக்கும்

கன்னி தெய்வ யானைக்கும் மாமனென வேபகரும்

வள்ளல்தனை வாழ்த்துகிறேன். 5