பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

I. இறைவனின் திருவுலா 1. கட்டியக்காரன் வந்தான் மன்மதன் தன் தேராகிய தென்றலிலே ஊர்ந்து வருபவன். அங்ங்னம் அவன் வருவதனால் வசந்த வீதிகளை உடையதாகத் திருக்குற்றால நகரம் விளங்கிற்று. அதன்கண் திருக்கோவில் கொண்டிருக்கும் செல்வர், குற்றாலத்து ஈசர் ஆவர். அவர், வீதியூடே பவனி வரப்போகின்றார். நில மகளைத் தன் மனைவியாக உடையவன் திருமால், அவனே எருது ஊர்தியாக அந்த இறைவனைத் தாங்கி வருபவன். அந்த விடையிலே ஏறியமர்ந்து அவர் இதோ பவனி வரப்போகின்றார். அதனைப் பற்றி ஊரவர்க்குக் கூறி எச்சரிக்கை சொல்லுவதற்காகக் கட்டியக்காரன் முற்பட்டு வந்தனன். நேர்மை கொண்ட முப்புரிநூல் விளங்கும் மார்பினையும், தன் கையிலே நெடிய கைப்பிரம்பினையும் உடையவனாக மழைக் காலத்தைக் கொண்ட மழை மேகங்களுள் சிறந்து விளங்கும் கருமையான ஒரு மேகத்தைப் போலக் கருநிறமுடையனான அக் கட்டியக்காரனும் குற்றாலத் தெருவிலே வந்தனன்.

தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர் பார்கொண்ட விடையில் ஏறும் பவனிஎச்சரிக்கைக் கூற நேர்கொண்ட புரிநூல் மார்பும் நெடியகைப் பிரம்பும் ஆகக் கார்கொண்ட முகிலேறு என்னக் கட்டியக் காரன் வந்தான்.

(வசந்தம் - தென்றல். 'காமன் உலாவரும் வீதி, என்னவே இளமைப் பருவத்தாரிடம் காமவேட்கை முகிழ்க்கும் பருவம் அது என்பதுமாயிற்று. மன்மதனுக்குரிய தேர் தென்றலாதலினால், தேர்கொண்ட வீதி, வசந்த வீதியாயிற்று. பார் கொண்ட விடை’ திருமால் என்பது, சிவபுராணங்களுள் சொல்லப்படும். இறைவன் பவனி வருவதனால் ஊரவர் அந்த உலாவைக் காண வருக; வீதியிலே ஒதுங்கி நிற்க’ என்றபடி முன்னறிவிப்புக் கூறவே