பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 13

முன்னதாக எச்சரிக்கை கூறிக் கட்டியக்காரன் வருகின்றனன். அவன், புரி நூல் மார்பினையும் உடையவன் என்பதனால் அவனும் பூணுரலினன் ஆவன். அவன் புரிநூல், வேத முறைமைப்படி அமைந்தது என்பார், 'நேர்கொண்ட என்றனர். கார்கொண்ட முகில் - மழை முகில், அதன் நிறம் கருமை. கட்டியம் கூறுவோன் கட்டியக்காரன், பண்டையோர் இத்தகையோரைச் சூதர், மாசுதர் என்பர்.)

- கண்ணிகள்

உலகத்து மக்களை எல்லாம் முறைசெய்து காப்பவர்கள் மண்ணுலகத்து அரசர்கள். தேவருலகத்துப் பலரையும் காப்பவர் தேவேந்திரன் முதலாகிய அவ்வவ்வுலகத்து இறை வர்கள். இவர்கள் முதலியோரை எல்லாம், சிவ சன்னதியிலே நெறிமுறை தவறாமற் காத்தருளும் செங்கோலான பிரம்பினை உடையவன் அவன். மகாமேரு பர்வதத்தையே வில்லாக வளைத்துக் கைக்கொண்டவர். மேலான உயர்வினை யுடையவர், திருக்குற்றாலநாதர். அவருடைய திருக்கோவிலின் திருவாசலிலே, கட்டியங்கூறி நிற்கும் கட்டியக்காரனாகிய அவனும், அவருடைய பவனி வரும் எச்சரிக்கைபற்றிய செய்தியை, அனைவருக்கும் கூறுவதற்காக நகரத்து வீதியிலே எழுந்தருளி வந்தனன். இராகம் - தோடி தாளம் - சாப்பு

பூமேவு மனுவேந்தர் தேவேந்தர் முதலோரைப் புரந்திடும்செங் கோலான பிரம்புடையான் மாமேருச் சிலையாளர் வரதர்குற் றாலநாதர் வாசற் கட்டியக் காரன்வந் தனனே!

(முழுமுதலாகிய சிவபெருமானே அனைத்துயிர்களையும் தன் அருட்கருணையினாலே காக்கும் தனிப்பெரு முதல்வனாவான். மனு வேந்தரையும், தேவேந்தரையும் நெறிப்படுத்திக் காப்பவனும் அவனே. அவனுடைய கட்டியக் காரனின் கைப்பிரம்பு, அதனால் அவரனைவரையும் புரந்திடும் செங்கோலாகும் சிறப்புடையதும் ஆயிற்று! என்று கொள்க. "செங்கோலான் பிரம்புடையான்' என்பது பாடமாயின்; 'செங்கோல் செலுத்துபவன், கையிற் பிரம்பும் உடையவன் என்க.)