பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

தேங்கிக் கொண்டிருக்கின்றது. தம்மை எல்லாம் அடியவராக உடைய தலைவனின் உலா வருகையினைக் கண்டு கண்டு உலகமெல்லாம் வளத்தால் தழைத்து ஓங்குமாறு இறையவர் இதோ திருவீதியிலே உலாவந்து கொண்டிருக்கின்றார்.

தொடரும் ஒருபெருச் சாளி ஏறிய

தோன்றல் செயப்படை தாங்கவே அடல்கு லாவிய தோகை வாகனத் தரசு வேல்வலம் வாங்கவே படலை மார்பினிற் கொன்றை மாலிகை

பதக்க மணியொளி தேங்கவே உடைய நாயகன் வரவு கண்டுகண்டு

உலகெலாந் தழைத் தோங்கவே. (பவனி) (பெருச்சாளி - கயமுகாசுரனாகிய பெருச்சாளி வாகனம். தோன்றல் - மகன். செயப்படை - வெற்றிப்படை அடல் குலாவிய தோகை - ஆற்றல் நிறைந்த மயில்; அது சூரனின் பகுதியாதலால், வேல் வலம் வாங்க - வலம் வேல் வாங்க எனப் பொருள் கூட்டுக. படலை - தழை மாலையுமாம். மாலிகை - மாலை. தேங்குதல் - நிறைதல், உலகந் தழைத்து ஓங்குதல் - உலகம் வளமையால் வாழ்வு பெற்றுச் சிறப்படைதல்.)

(4) இடியின் முழக்கத்தோடு வந்துகொண்டிருக்கும் கருமேகம்' என்னும்படியாக, யானைகளின் மேலாகவிருந்து பெரிய பெரிய பேரிகைகளின் முழக்கங்கள் ஒருபால் எழுகின்றன. உடுக்கையின் முழக்கம் ஒருபால் எழுகின்றது. இவ்விரு முழக்கங்களாலும் எழுகின்ற பேரொலியினைத் தாளாமல் அட்டதிக்குக் களிறுகளும் தத்தம் துதிக்கை களால் தத்தம் செவிகளைப் புதைத்துக் கொள்ளுகின்றன. அடியவர்கள் முழக்கிய திருப்பல்லாண்டின் இசையானது பரந்து சென்று, மூடிய அச்செவிகளைத் திறந்தது. நாயன் மார்கள் மூவரும் இறைவனின் பெருமைகளை வடித்துத் தந்த திருமுறைகள் ஒருபுறமாகவும், நான்மறைகளின் முழக்கம் ஒரு புறமாகவும் முறையே வழங்கிவர, நம் இறையவரும், திருவீதியிலே இதோ உலா வருகின்றனர்.