பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 19

இடியின் முழக்கொடு படரும் முகிலென

யானை மேற்கன பேரி முழக்கமும் துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கை யாற்செவி புதைக்கவே அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை

அடைந்த செவிகளும் துறக்க மூவர்கள் வடிசெய் தமிழ்த்திரு முறைகள் ஒருபுறம்

மறைகள் ஒருபுறம் வழங்கவே! (பவனி) (படரும் முகில் - வானிலே படர்கின்ற மேகம். பேரி - பேரிகை துடி - உடுக்கை; குறிஞ்சி நிலத்து வாத்திய வகை. திசைக்கரி - அட்டதிக்குக் களிறுகள். திருப்பல்லாண்டு - புகழ்ப்பாக்கள்; மங்கல வாழ்த்து ஒலிகள். மூவர்கள் - அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர். வடிசெய் தமிழ் - வடித்துச் செய்த தமிழ்த் திருமுறைகள் என இவற்றையும், நான்மறைகள் என வேதங்களையும் சமமாகவே குறிப்பிடுதல் காண்க.)

(5) பொன்னாற் புனையப் பெற்ற தம்புரு, கின்னரம் ஆகியவையும், மிகுந்த விருப்பத்தை எழச் செய்யும் வீணையும் இனிதே மிழற்றுகின்றன. மிகுதியான அழகுள்ள முத்துப் பல்லக்கும் திருக்குடையும் அழகிய ஆலவட்டங்களும் பெருமானுக்கு நிழல் தந்து வருகின்றன. வனிதைமார்கள் பலர் குஞ்சம், சாமரை, விசிறி ஆகியவற்றை, வரிசை வரிசையாக இருபுறமும் நின்று சுழற்றிக் கொண்டே உடன் வருகின்றனர். தன நாயகனாகிய குபேரன், இந்திரன், வருணன் முதலிய சகலமான தேவர்களும், அவன் புகழைப் பாடிக் கொண்டே உடன் வருகின்றனர். இங்ங்ணமாக, நம் பெருமான் இதோ பவனி வந்து கொண்டிருக்கின்றனர்)

கனக தம்புரு கின்ன ரங்களி

ஆசை வீணை மிழற்றவே அனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன்

ஆல வட்டம் நிழற்றவே வனிதை மார்பல குஞ்சம் சாமரை

வரிசை விசிறி சுழற்றவே