பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 21

பெருக்கமும், யானைப் படைகளின் பெருக்கமும், குதிரைப் படைகளின் பெருக்கமும் தரை எங்கும் நெருக்கங் கொள்ளும் படியாக அணியணியாகத் திரண்டு வந்து கொண்டிருக் கின்றன. முதன்மையான கொடிகளின் அடர்த்தியானது பரந்த ஆகாயம் முழுவதையுமே போய் மூடின. அதனால், வானமும் இருண்டது. பின்னர், அவற்றினும் தனிப்பட்டதாகிய ஒளி பரப்பும் இடபக் கொடியானது அவற்றுக்கும் மேலாக எழுந்தது. திக்குகள் எல்லாம் தோன்றுமாறு அந்த இடபக் கொடியும் விளக்கம் பெற்று அவ்வாறு விளங்க, நம் இறையவர் எழுந்து, இதோ வீதி உலா வருகின்றனர்!

சேனைப் பெருக்கமும் தானைப் பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் ஆனைப் பெருக்கமும் குதிரைப் பெருக்கமும்

அவனி முழுதினும் நெருங்கவே மோனைக் கொடிகளின் காடு நெடுவெளி

மூடி அடங்கலும் ஓடி இருண்டபின் ஏனைச் சுடர்விரி இடப கேதனம்

எழுந்து திசைதிசை விளங்கவே. (பவனி) (தார் - கொடிப்படை. வீரர்களின் மார்பிலே விளங்கும் மாலைகளுமாம். மோனைக் கொடி - முதன்மையான தேவர்களின் கொடிகள்; அயனின் அன்னக்கொடியும், மாலின் கருடக் கொடியும், அடங்கலும் - முழுமையும். இடபகேதனம் - ரிஷபக் கொடி) -

(8) கொத்தான மலர்களைச் சூடிய கூந்தலினரான தெய்வ மங்கையர்கள் குரவை ஆடுகின்றனர். அவருடைய குரவை ஒலியானது கடலின் பேரலை ஒசையினையும் அடங்குமாறு செய்வது போல மிகுதியாக எழுகின்றது. தம்முள் ஒத்த திருச்செவியினரான கனக, கம்பளர் என்னும் கந்தருவர்கள் இருவருடைய பாடல்களின் இனிமையானது ஏழு உலகங் களையும் உருகச் செய்து கொண்டிருக்கின்றது. மத்தளங்கள் இடிகள்போல முழங்குகின்றன. மயில் போன்ற சாயலுடைய வரான நடன மாதர்களின் நடனங்கள் பெருக்கமாக வீதியிலே