பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

என்பார் சிலர் விளையாட்டை மறந்தாள். பாடவும் மறந்தாள். வாடாத மாலைகளைச் சூடவும் மாட்டாள்; பாருங்கள்! என்பார் சிலர். 'காமமாகிய பேய் தான் பிடித்துவிட்டதோ? அல்லது பித்தம்தான் கொண்டனளோ?' என்பார் சிலர். ‘என்ன மாயமோ?’ என்பார் வேறு சிலர். "ஐயோ! என் செய்வோம்? என்று பதறுவார் சிலர். 'தெய்வமே' என்று வேண்டுவார் சிலர் களைப்பாய் விட்டதோ?’ என்பார் சிலர். 'மூச்சு இருக்கின்றதோ? என்பார் சிலர். கையிலே திருநீறு எடுப்பார் சிலர். இப்படியாகப் புலம்பிய பெண்கள் எல்லாம் இறுதியாக, சூலக் கையானே திரிகூட நாதனே! கண் பாராய்' என்று வாய்விட்டுப் புலம்பி இறைவனை நோக்கி வேண்டி (3ÖTT TJEGYT. இராகம் - தோடி தாளம் - சாப்பு

- கண்ணிகள்

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள்

நேசமான் என்பார் விளை

யாடாள் பாடாள் வாடா மாலை

சூடாள்காண் என்பார்

பேசிடாத மோசம் என்ன மோசமோ

என்பார் காமப் பேயோ என்பார் பிச்சோ என்பார்

மாயமோ என்பார்! 1

ஐயோ என்ன செய்வ மென்பார்

தெய்வமே என்பார் களைப் பாச்சோ என்பார் மூச்சே தென்பார்

பேச்சேதோ என்பார் கையில் திரு நீறெடுப்பார் தையலார்

எல்லாம் சூலக் கையாதிரி கூடநாதா கண்பாராய்

என்பார். 2 (வசந்தவல்லி காமுற்று மயங்கித் தரையிலே வீழ்ந்த நிலை யினைக் கண்டதும் அவளுடைய தோழிமார்கள் எல்லாம்