பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 49

16. கொடும்பாவி நிலவே! சற்றுங் குளிர்ச்சியே இல்லாதுபோன கொடிய பாவியாகிய வெண்ணிலாவே! பெண்களுக்குள்ளே குழல்வாய் மொழிக்கு ஒர் உடற்பாதியையே கொடுத்தவர், எனக்குத் தந்த மயக்கத்தின் காரணமாக, யான் இப்படி மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றேனே? என்போலவே உனக்கும் மதிமயக்கந்தானோ? நம் நெற்றிக் கண்ணிலே நெருப்பை வைத்துக் கொண்டு, பிறரையெல்லாம் எரியச் செய்கின்ற அவருடன் கூடிக் காந்திக் காந்தி, விண்ணிலேயும் இப்படி நெருப்பை வைத்து விட்டாயோ? இது என்ன முறையோ?

பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத்

தவர்கொடுத்த பிரமை யாலே மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றேன்

உனக்கும்மதி மயக்கந் தானோ கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா

ருடன்கூடிக் காந்திக் காந்தி விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக்

கொடும்பாவி வெண்ணிலாவே!

17. நிலவைப் பழித்தல்: வெண்ணிலாவே தண்மையான அமுதத்துடனன்றோ அந்நாளிலே பாற்கடலில் நீ பிறந்தாய் இருந்தும், அந்தக் குளிர்ச்சியான தன்மைகளை எல்லாம் ஏன்தான் மறந்து விட்டாயோ? திருமகளாகிய பெண்ணுடன், உடன் பிறப்பாகவும் அன்று நீ தோன்றியதும் உண்டல்லவோ? வெண்ணிலாவே! என் பெண்மையைக் கண்ட பின்னும், என்னை நீயும் இப்படிக் காய்ந்து வருத்தலாமோ?

என்னைப்போல மண்ணிலே பிறவாமல் நீ விண்ணிலே பிறந்துவிட்ட காரணத்தாலோ? அல்லது நான் சிறுமியாக இருக்கையிலே உன்னை வேண்டி எருவிட்டு எறிந்தேனே அந்தக் காரணத்தினாலோ? கண்ணிலேயே விழிக்க விரும்பாத கொடிய பகைவனைப் போலே என்னைக் காந்தச் செய்து, இப்படி நீயும் வெறியாட்டம் ஆடுகின்றாய்?