பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

முறையற்ற செயல்களை முன்னர் நீ செய்ததனால் அல்லவோ அடிமைக்காரன்போல இப்போது நீ கூனிக் குறுகிப் போயிருக்கின்றாய்? எனக்கு மோகம் விளை வித்தவன் என்னருகே வரக் காணேன்' என்று நான் துடி துடித்துக் கொண்டிருந்தால் உனக்கு அதனால் இப்படி வேகம் ஏற்பட்டு, என்னைக் காய்வதற்குத்தான் காரணம் என்னவோ?

என் கூந்தலை நாகப்பாம்பு என்று நீ தவறாக எண்ண வேண்டாம். அது நீண்ட கூந்தலைப் பின்னலிட்டுத் தொங்கும் சடையேதான் என்பதைக் காண்பாயாக. அழகிய தாமரை மலரின் பெருமையையும் நீ தோன்றிக் கெடுத்து விட்டாய். என்னையும் ஏன் இப்படிக் காய்கின்றாய்? முக்கூடலிங்கரின் முன்னாற்போய் அவரைக் காய்ந்தால் என்னவோ? இராகம் - வராளி தாளம் - ஆதி -

கண்ணிகள் தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே - அந்தத் தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே - என்றன்

பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே 1 விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே - எரு விட்டுநான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே - மெத்தக்

காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே. 2 ஆகடியம் செய்தல்லவோ வெண்ணிலாவே - நீதான் ஆட்கடியன் போற்குறைந்தாய் வெண்ணிலாவே மோகன்வரக் காணேன்என்றால் வெண்ணிலாவே - இந்த

வேகமுனக் கானதென்ன வெண்ணிலாவே. 3

நாகமென்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே - இது வாகுகுழற் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே

கோகனக வீறழித்தாய் வெண்ணிலாவே - திரி

கூடலிங்கர் முன்போய்க் காய்வாய் வெண்ணிலாவே 4