பக்கம்:திருக்கோலம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$98 திருக்கோலம்

திருவுள்ளத்தில் அம்பிகையின் வடிவை அழகு ஒழுகும்படி மெல்ல மெல்ல எழுதி முழுவடிவத்தையும் அங்கே தாரணை செய்து, அதையே உண் முகத்தே பார்த்துத் தவத்தில் இருக்கிறனும், அப்படி இருக்கும்போது அவன் உள்ளத்தில் உயிருள்ள சித்திரமாக அம்பிகை நிற்கிருள்.

ஆகவே, அவன் புறத்தோற்றத்தில் எல்லாம் அடங்கிய யோகியாக இருந்தாலும், அம்பிகையையே நினைத்திருந் தான். அதன் விளைவாகத்தானே தன் தவ விரதத்தைக் கலத்துக் கொண்டு இமயமலையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்? பார்வதியின் தவத்தைச் சோதித்துத் தன் காட்சியைக் காட்டி, நாளேக்கு உன்னை மணம் புரிந்து கொள்கிறேன்?’ என்று வாக்கு அளித்தான். அதன்படியே பார்வதி திருமணம் நிகழ்ந்தது. .

அதோடு நின்றன? அம்பிகையைத் தனியாக அருகில் இருத்திக்கொண்டு இடபாரருடகை எழுந்தருளும் ஐயன், அப்பெருமாட்டியோடு பின்னும் நெருக்கமாக இருக்க எண்ணின்ை, அப்படிச் சொல்வதைவிட, தவயோகத்தில் இருந்த இறைவன் உள்ளத்திலே தன் உருவைக் காட்டி, பிறகு தன்னே மணம் செய்துகொள்ளச் செய்தாள் அம்பிகை என்றுசொல்வதுதான் பொருத்தம். பிறகு, அதற்கு மேலும் அந்தப் பெருமானின் ஒரு பாதியையே ஆக்கிரமித்துக் கொண்டாள்.

அம்பிகையைத் தன் ஒரு பாகத்தில் இறைவன் வைத்துக் கொண்டான் என்று சிவபக்தர்கள் சொல்வார்கள். அதனல் அப்பெருமானுக்கு அர்த்தநாரீசுவரன் என்ற திருநாமம் அமைந்தது. ஆல்ை அம்பிகையின் பக்தர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். அம்பிகையே அந்தப் பாகத்தை உரிமையோடு பெற்றுக் கொண்டாள் என்பார்கள். அருண கிரிநாதர், அம்பிகை தன் வலப்பாகத்தில் இறைவ&ன ஏற்றுக்கொண்டிருக்கிருள் என்பார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/108&oldid=578047" இலிருந்து மீள்விக்கப்பட்டது