பக்கம்:திருக்கோலம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் ஆற்றலும் கருணையும் 99

  • ஒருவரைப் பங்கில் உடையாள்?? * சுத்த நித்தமுத்தித்

தியாகப் பொருப்பைத்ரிபுராந்தகனே

த்ரயம்பகனேப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி??

என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிருர். சைவர்கள் அர்த்தநாரீசுவரனுக அந்தக் கோலத்தைக் கண்டார்கள்; அருணகிரிநாதரோ அர்த்தேசுவர நாரியாகக் கண்டார்! அம்பிகையின் பக்தர்களும் அப்படித்தான் காண்பார்கள்.

அபிராமியட்டர் அப்படியே காண்கிருர், அம்பிகை தலை வனுடைய ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டு ஆட்சி நடத்து கிருளாம். பெண்ணே வெறுத்து ஒதுக்கியவனேப்போலத் தவவிரதம் பூண்டிருந்த சிவபிரான மயக்கி, உலகமெல் லாம். இவர் விரதம் போனபடியைப் பாருங்கள்!” என்று பழிக்கும்படி அவனுடைய இடப்பாகமாகிய ஒரு பாதியை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்சி செலுத்தும் பராபரையாக இருக்கிருளாம். -

சிவபெருமான் காமனைத் தன் கண்ணுல் அழித்தவன். தவவிரதம் பூண்டவன். அவனே மயக்கி ஒரு பாகத்தைப் பறித்துக் குடிகொண்டு ஆட்சி நடத்துகிருள் அன்ன.

விழியால் மதனே அழிக்கும் தலைவர் அழியா

விரதத்தை அண்டம் எல்லாம் பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு

ஆளும் பராபரையே!

அவன் விரதத்தை அழிக்க வந்தான் மன்மதன். அவனல் சிவபிரானுடைய விரதத்தை அழிக்க முடியவில்லை. அவனே அழிந்து போன்ை. அத்தகைய அழியாத விரதம் அது. அதை மாற்றி அவனே மயக்கி உடம்பில் ஒரு பாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/109&oldid=578048" இலிருந்து மீள்விக்கப்பட்டது