பக்கம்:திருக்கோலம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருக்கோலம்

களின் வலிமையால் யாவருக்கும் துன்பம் உண்டாக்கியதை அறிந்த இறைவன் அந்தக் கோட்டைகளே அழித்தான். அசுரர்களை அழிக்கவில்லை. அவர்கள் இறைவளேப் பணிந்து தொண்டு பூண்டனர். தாரகாட்சனும் வித்யுன்மாலியும் வாயில் காவலர்களாகவும், வாணன் குடமுழவு வாசிப்ப வகைவும் இறைவன் திருத்தொண்டில் ஈடுபட்டார்கள்.

புராணக் கதைகளுக்கு உட்பொருள் உண்டு. இறைவ னுடைய திருவருட் செயல்கள் சில உண்மைகளே எடுத்துக் காட்டுபவை. மூன்று புரங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களேக் குறிப்பவை. இறைவன் ஞான சொரூபி, அவன் புன்முறுவலாகிய ஞானத்தால் மும்மலங் களும் அழிந்தன. அவற்ருேடிருந்த அசுரர்கள் மும்மலத் தோடு உள்ள ஆன்மாக்கள். மலம் நீங்கிய ஆன்மாக்கள் பேரின்பப் பெருவாழ்வை அடையும். அப்படி அடைந்த தைக் காட்டுவது, மூன்று அசுரர்களும் இறைவன் திருத் தொண்டில் ஈடுபட்டு இன்பத்தை அடைந்த செயல்,

' அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புர மாவது மும்மல் காரியம், அப்புரம் எய்தமை யாரறிவாரே??

என்று இக்கருத்தைத் திருமந்திரம் கூறுகிறது.

இறைவன் செய்த மற் ருெரு பராக்கிரமத்தையும் அபிராமி பட்டர் நினைவு கூர்கிருர். பிரமனுக்கு ஆதியில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானுக்கும் ஐந்துதலேகள்; தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம், அகோ ரம் என்பன அவை. பிரமன், எனக்கும் சிவனுக்கு உள்ள ஐந்து தலைகள் இருக்றின்றன. நானும் அவனும் சமானம்’ என்று அகந்தை கொண்டான்; அப்பொழுது சிவபெருமான் அவனுடைய நடுத்தலேயைக் கிள்ளி எறிந்தான். பிரமனு, டைய அகங்காரம் ஒழிந்தது. பிரமன் சிரம் கொய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/114&oldid=578053" இலிருந்து மீள்விக்கப்பட்டது