பக்கம்:திருக்கோலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோலம் 5

அடக்கித் தியானித்தால் அன்னேயின் திவ்யதரிசனத்தை உள்ளே காணலாம். இப்போது புறத்தே கானும் விக்கிரகம் வேறு; அப்போது உள்ளே காணும் திருக்கோலம் வேறு. பச்சை அப்பளம் பார்க்க அழகாக இராது. அதை எண் ணெயிலே பொரித்தால் நன்ருகப் பொரிந்து நிறமும் சுவை யும் பெற்று விடுவதுபோல, புறத்தே கானும் அம்பிகையின் திருக்கோலத்தைப் பக்தியுணர்ச்சியுடன் உண்முகத்தே நிறுத்தித் தியானம் செய்தால் அப்போது அவளுடைய வடிவம் சோதியுடையதாகத் தோன்றும்; உயிர் ஓவியமாகத் திகழும். -

இவ்வாறு பல காலம் பயிற்சி செய்து அம்பிகையைத் தம் உள்ளே தரிசித்தவர் அபிராமிபட்டர்; அவளுடைய கோலத்தை முழுமையாக உள்ளே தியானித்தவர்.

நமக்கு மிகவும் பிரியமான ஒருவரை நாம் நினைத்தாலும் அவர் வடிவம் முழுவதும் மனத்தில் தெளிவாகத் தெரியாது; கனவிலே தெளிவாகத்தெரியும். அப்போது பொறிகள் வேலே செய்யாமல் இருப்பதால், மனத்தில் வடிவம் தெளிவாகத் தோன்றுகிறது. நனவிலேயே ஐம்பொறிகளையும் அடக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்குத் தியானமூர்த்தி தெளிவாகத் தெரியும். அப்படி அப்பியாசம் பண்ணினவர் அபிராமி பட்டர். 'உன்னுடைய திருக்கோலம் முழுவதையும் என் மனத்தில் தியானித்தேன்’ என்று அவர் சொல்கிறர்.

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்.

எத்தனையோ பிறவிகளில் முயன்ருல் இந்தப் பிறவியில் இத்தகைய பேறு கிடைக்கும். நூதன விவேகி உள்ளம் நுழையாது; நுழையுமாகில், பூதசன் மங்கள் கோடி புனிதனும் புருட ளுமே” என்று கைவல்ய நவநீதம் சொல்லும். அத்தகைய புண்ணிய புருஷர் இந்த மகானு பாவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/15&oldid=577954" இலிருந்து மீள்விக்கப்பட்டது