பக்கம்:திருக்கோலம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு நில் - 191

வகை அன்னே சுடர் விடுகிருள், பக்தியில்ை உருகி உபாசன செய்பவர்களுடைய உள்ளக்கமலத்தில், எங்கோ பறக்கும் அன்னம் தனக்குரிய இடத்தைக் கண்டு பிடித்துக் களிப்புடன் வீற்றிருப்பதைப்போல, இதயகமல வாசினி யாக அம்பிகை வீற்றிருக்கிருள். காட்டில் குயிலும், மலையில் மயிலும், வானில் கதிரவனும், கமலத்தில் அன்னமும் தத்தமக்கு ஏற்ற இடங்களில் அமைந்தவை. அந்தப் பொருத்தத்தை நோக்கியே அம்பிகையைக் குயில் முதலியனவாக உருவகம் செய்தார். .

குயிலாய் இருக்கும் கடம்பா

டவியிடைக் கோலஇயல் மயிலாய் இருக்கும் இமயா

சலத்திடை; வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்;

கமலத்தின் மீதுஅன்னமாம்; கயிலாயருக்குஅன்று இமவான்

அளித்த கணங்குழையே.

(கைலாசபதியாகிய பரமேசுவரனுக்குப் பழைய காலத் தில் இமாசல அரசன் திருமணம் செய்துகொடுத்த, கன மான பொற் குழையை அணிந்தவளாகிய அம்பிகை, கடம்ப வனத்தில் குயிலாக வீற்றிருப்பாள்; இமயமலையில் அழகும் நல்லியல்பும் உடைய மயிலாக உலாவிக்கொண்டிருப்பாள், வானத்தில் வந்து உதயமாகும் கதிரவகை ஒளி பரப்பிக் கொண்டு இருப்பாள்; நினைப்பாரது உள்ளக் கமலத்தின் மேல் அன்னமாக எழுந்தருளியிருப்பாள்.

கடம்பாடவி.கதம்பவனம். கண்ணுக்கு அழகு தரும் பறவை யாதலின், கோல இயல் மயில்’ என்ருர். வெயில். சூரியன்: ஆகுபெயர். கமலம்-உள்ளக்கமலம் முதலியன. அன்று: பண்டறி சுட்டு. கனம் குழை: அன்மொழித் தொகை; எழுவாய். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/201&oldid=578140" இலிருந்து மீள்விக்கப்பட்டது