பக்கம்:திருக்கோலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! - ვ7

மிக மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த ஒருவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருப்பவரோடு தோழமை கொள்வது என்பது இயல்பு அன்று. அவர்கள் தம் தம் இயல்புக்கு ஏற்றவர்களோடு கூடுவதும் நெருங்கிப் பழகுவதும் வழக்கம். தாழ்ந்தவர்களுக்குத் தம்மினும் உயர்ந்தவர்களோடு கூடிப் பழகவேண்டும் என்ற எண்ணமே தோன்ருது. கிணற்றுத் தவளைக்கு அந்தக் கிணறே சொர்க்கம் என்ற எண்ணமே இருக்கும். ஒருகால் உயர்ந்தவர்களோடு சேரவேண்டும் என்ற எண்ணம் அருமையாக உண்டாளுல், அதற்குரிய வழி தெரியாது. தெரிந்து அணுகினுலும் அவரோடு பழக அஞ்சுவார்கள். ஒருகால் சிறிது பழகினல் முன்னே வாசனை யால் அது ஒத்து வராது; மறுபடியும் பழைய கூட்டத் தோடே சேர்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பே உண் டாகும். இவ்வளவையும் கடந்து மேலோர்களோடு கலந்து பழகும் நிலை உண்டாகுமால்ை அது அவருடைய சொந்த முயற்சியில்ை உண்டானது என்று சொல்ல முடியாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட திருவருளாற்றலே அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்ததென்றே சொல்ல வேண்டும். - - . -

புலி புல்லைத் தின்ருல் வியப்பாக இராதா? ஊனேயே விரும்பி உண்ணும் அது புல்லே உண்பது இயற்கைக்கு மாறனது. அப்படியே இழிந்த பண்புடையவர் அடியார் களோடு கூடியிருப்பதும் இயற்கைக்கு மாருனது; வியப்பை உண்டாக்குவது, மற்றவர்கள் அந்த நிலையைக் கண்டு வியப்பது பெரிதன்று. அவரே தம்முடைய முன்னே நிலை யையும் பின்னே நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து வியப் புறுவார். . . -........

அவ்வண்ணமே வியப்பில் ஆழ்ந்து, அம்பிகையின்

திருவருள் வல்லபமே அந்த வியப்புக்குக் காரணம் என்று சொல்கிருர் அபிராமிபட்டர். - . . " :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/47&oldid=577986" இலிருந்து மீள்விக்கப்பட்டது