பக்கம்:திருக்கோலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம் 8象

கங்கை அழுக்காகாது. அவனிடம் உள்ள அழுக்கெல்லாம் போய்விடும். இன்னும் ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். சாக்கடை இருக்கிறது; அதில் உள்ள நீரின் நிறம், மணம், குணம் எல்லாம் அருவருக்கத்தக்கவை; உடலுக்குத் துன்பம் உண்டாக்குபவை. ஆற்றின் நீரோ நேர்மாறனது. அது தூய்மையே வடிவானது. இரண்டும் எல்லா வகையிலும் மாறுபட்டவை. சாக்கடை நீர் ஆற்றிலே கலந்துவிடுகிறது. அப்போது சாக்கடை நீர் தனியே இராது. ஆற்று நீரோடு கலந்து அதுவும் தீர்த்தமாகிவிடும்.

ஊர் அங் கனநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்??

என்று நாலடியார் சொல்கிறது. அவ்வாறே இழிந்த சாக் கடையைப்போல இருப்பவன் கங்கையைப் போன்ற அடியாரோடு சோந்தால் அவனும் அடியாகு கிவிடுவான்; தூய வகை மாறிவிடுவான். - -

'என்னே அடியார்களோடு சேர்த்துவிட்டு என்னுடைய கொடிய கன்மங்களே ஒட்டிவிட்டாள்; இது எவ்வளவு பெரிய வியப்பு!?? . z *

கொடிய வினே ஒட்டியவா!

வியப்பு இதோடு நிற்கவில்லை. அன்னையின் திருவருகப் பெறுவதற்கு அவளைத் தேடி நாம் போக வேண்டும். அன்னையோ அடியாரைத் தேடி வருகிருள். என்ன அடியாரோடு சேர்த்தாள்; என்னிடமிருந்த கொடிய ೧೩ಶಿಸr களைப் போக்கிள்ை; எனக்குத் திருவருள் பாலிக்க என்னிடம் ஓடிவந்தாள். இது மிகப் பெரிய ஆச்சரியம் அல்லவா?

- என்கண் ஒடியவா! - -

‘என்னிடம் வந்தவாறு என்ன வியப்பு!’ என்று: சொல்லவில்லே! என்னிடம் உள்ள பெருங்கருணையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/49&oldid=577988" இலிருந்து மீள்விக்கப்பட்டது