பக்கம்:திருக்கோலம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருக்கோலம்

அன்பர்கள், மரணம் அடையும்போது யமபடர்கள் தம்மை அழைத்துச் செல்லும்படி இருக்கக்கூடாது என்று இறைவனே வேண்டிக்கொள்வார்கள்; ஒருகால் யம தூதர் வந்தாலும் தம்மை அவரிடமிருந்து காப்பாற்றி முத்தியின்பத்தை நல்க வேண்டும் என்று விண்ணப்பிப் பார்கள்.

புராணக் கதைகளில் சிலரைப்பற்றிய வரலாறுகள் விநோதமாக இருக்கும். பாவியாக இருந்த ஒருவன் இறந்து போகிருன். அப்போது அவன் உயிரைக் கட்டிக்கொண்டு போக யமபடர்கள் வருகிருர்கள். அவனப் பாசத்தால் கட்டுகிறர்கள். அப்போது சிவகணங்கள் வருகின்றன. எஇவனே நீங்கள் ஏன் கட்டிக்கொண்டு போகிறீர்கள்?? என்று கணங்கள் கேட்கின்றன. ‘இவன் பல பாவங்களைச் செய்தவன். ஆகையால் அவற்றுக்குரிய தண்டனையை அநுபவிக்கவேண்டும். அதற்காக இவனை யமபுரத்துக்கு இழுத்துச் செல்கிருேம்’ என்கிறர்கள். அது கேட்ட சிவகணங்கள், இவன் சிவநாமத்தைச் சிவராத்திரியில் ஒரு மணி சொன்னவன். ஆகையால் இவனைச் சிவலோகத் துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிருேம். இவனே விட்டு விடுங்கள்’ என்று சொல்கின்றன. யமபடர்கள் கேட்க வில்லை. இருசாராருக்கும் போர் மூளுகிறது. யமபடர்கள் தோற்றுப்போகச் சிவகணங்கள் அவனை அழைத்துக் கொண்டு சிவலோகம் செல்கிறர்கள். இப்படிக் கதைகள் இருக்கும்.

நல்ல காரியம் செய்தவர்கள், இறைவனிடம் பக்தி செய்தவர்கள், நல்ல கதியையே அடைவார்கள். ஆண்ட வன் அவர்களே யமனுடைய கொடுமையினின்றும், மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகிய மரணத்துன்பத்தினின்றும், காப் பாற்றுவான் என்பதையே இப்படிக் கதையாகப் புரா கணங்கள் சொல்கின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/98&oldid=578037" இலிருந்து மீள்விக்கப்பட்டது