பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z52 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை “ தில்லை மல் லெழிற் கானல்" என வருவதால் தில்லை (சிதம்பரம்)க்கு அருகில் கடல் அக்காலத்தில் இருந்தது போலும்! இங்கு கானல் என்பது கடற்கழி. ‘ மடிலவிழ் பூங் கைதையங் கானல் ” எண் வருவதால் கானலில் தாழை மலர் மலரும் என்பதை அறிகின்ருேம். 56. கொடி (X - 65) இடிபங் கொடி, காமன் தன் வென்றிக் கொடி, கொடித் தேர் மறவர், கொடி முன்றில், கொடி வாரணம், கோப்பு அணிவான் தோய் கொடி என்னும் தொடர்களில் கொடி வருவது காணலாம். டி, 57. சங்கு - சங்கம் (6.3) கடலில் சங்கம் ஆர்க்கும். சங்கினின்றும் முத்து பிறக்கும் (ஒரு சலஞ்சலம் ஆயிரம் வலம்புரிச் சங்கத்துக்குச் சமமானது,) சலஞ்சலத்தின் வலிய பெடைமேல் அன்னப் பறவை துயில் கொள்ளும். தில்லை முற்றத்தில் சங்க வளையல் விற்கப்படும். மல்லிகை மலராகிய வெண் சங்கை வண்டுகள் ஊதும். வலம்புரி வெண் சங்குகள் ஆர்ப்பது பெருந்தேர் வருவது குறிக்கும். கீழ்த் திசைக் கடலில் சங்குகள் கிரம்ப உள்ளன. சங்க கிதி கூறப்பட்டுளது. 58. சந்திரன் (64) கதிர், சந்திரன், சுடர், சோமன், திங்கள், பனிக் கோடு பணித் துண்டம், பிறை, மண்டலம், மதி, - எனும் சொற்க ளால் சந்திரன் கூறப்பட்டுள்ளான்.