பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. மணிவாசகர் வரலாற்று நினைவுப் பகுதி மணிவாசகர் வரலாற்று நினைவுப் பகுதி : திருக்கோவையாரில் - 38 இடங்களில் உள்ள பாடல் பகுதிகளில் கின்றும் மணிவாசகருக்குத் தில்லைப் பெருமான் இடத்தில் உள்ள பக்திகிலே நன்கு புலப்படுவன வாய் உள்ளது. அப்பகுதிகளின் கருத்துக்கள் பின் வருமாறு. 1. தலைவன் கூற்று : அணியும் அமிழ்அம் என் ஆவியும் ஆயவன் தில்லைப் பெருமான் அவர் என்னே ஆளும் படியாக ஊழ் இருந்தது. அவருடைய திருவடி மலர் என் தலைக்கு அணியாகும். இந்திரன், பிரமன், திருமால் இவர் களுக்கு இருளாய் இருக்கும் பெருமான் என்னே ஒரு பொரு ளாகப் புகுந்து ஆண்டு கொண்ட ஒளியாய் விளங்கு. கின்ருர், அவருடைய திருவடி என்பிறவி கெடும்படி அழி: கின்றது. அதுவோ, இதுவோ நல்ல சமயம் என் அறு பொதுவாக கின்ற கிலைமையை நீக்கி உண்மை வழிகாட்டி என்னே ஆண்டவர் தில்லைப் பெருமான். யான் நரகத்தில் அழுந்தாத் வகை என்னே அவர் ஆண்டு கொண்டார். காய்க்கு உள்ள குணம்கூட இல்லாத என்னேத் தனக்கு நல்ல தொண்டு செய்யும்படி ஆண்டினர் பெருமான். சுற்றத்தார் உடைய பலம் இன்மையை எனக்கு விளக்கி என்னை உய்வித்தனர். என்னேக் கடவுட் பித்தனுக்கினர்' பெருமான். 2. தலைவி கூற்று : உள்ளம் உருகத் தன்னே ஆகி. கொண்டு தம் அடியார் கூட்டத்தில் என்னேயும்சேர்த்துக் கொண்டார். என்னுடைய வாயிலும் மனத்திலும் பிரியா தவர் இறைவர். is .