பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பாங்கற் கூட்டம்

தேற்றவும் வல்லேன், அங்ஙனம் இருந்தும் இப்பொழுது ஒரு சிறிய மானினுடைய (இளமாதினுடைய) விழியினால் மனம் அழிந்து மயங்குகின்றேன்,' எனக் கூறினன்.

8. விதியோடு வெறுத்தல் (26. நல்வினை)
வலியழிந்தமை கூறி வருந்தி நின்ற தலைவன் பாங்கனோடு புலந்து வெள்கி ' ஒரு மாதுக்கு நான் தளர்வுற்றேன் என்று, நான் பற்றுக்கோடாக நினைந்து இருந்த பாங்கனே என்னை இகழ்கின்ருன், தில்லையைத் தொழாதவர் போல எனது தொல்வினையால் எனது உயிர் துயரம் உறுகின்றது; அவ்உயிர் வலியுறும் வண்ணம் நான் செய்த நல்வினையும் நான் உய்யும்படி பயன் தரவில்லை,’’ எனக் கூறி வருந்தினான்.

9. பாங்கன் நொந்து உரைத்தல் (27. ஆலத்தினால்)
இதைக் கேட்ட பாங்கன், "அமிர்தம் தன்குணம் கெடினும், பெய்யும் காலத்து மழை பெய்யாது மாறினும், மாறாத வண்மையை உடைய உனது சீரிய ஒழுக்கத்தை ஒருத்தி காரணமாக நீ மறந்தது என்னுடைய தீவினைப் பயன்தான் என்று கூறித் தானும் தலைவனுடன் கூட வருந்தினான்.

18. இயல் இடம் கேட்டல் (28. நின்னுடை)
இங்ஙனம் நொந்து உரைத்த பாங்கன் தலைவனை ஆற்றுவித்தல் தனது கடன் என உணர்ந்து, சிலம்பா! உன்னை இவ்வாறு செய்த மாதின் இருப்பிடம் கயிலை மலையோ? தாமரைப் பூவோ? வானே? அவள் இடம் யாது? அவள் தன்மை யாது? கூறுவாயாக' எனத் தலைவனை வினவினன்.

11. இயல் இடம் கூறல் (29. விழியால்)
தலைவியின் இடமும் இயலும் கேட்ட பாங்கனுக்குக கயிலைமலையில் திகழும் பொழில்தான்' என்று தலைவியின் இடத்தையும், அவள் மான்போலும் விழியாள்;