பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பாங்கற் கூட்டம் க : தம்முடைய அடிகளே நிலத்தில் வைத்து இக்கயிலைப் புனத்தில் தனி நின்று செய்யக் கருதுகின்ற பெரிய தவம் பாதோ’ எனக் கூறித் தளர்வு நீங்கினன். 23. மொழிபெற வருந்தல் (41. காவிநின்று) அங்ங்னம் தளர்வு நீங்கின் தலைவன் தலைவியை நோக்கி நீ கமலத் தேவியோ (இலக்குமியோ) என ஐயுற்றேன், நான் தெளிந்து அறிய சிறிதாயினும் நீ வாய் திறவாய், திறவாவிடில் என் அமுதமே! அணங்கே! இப்பொழுதே என் உயிர் அழிகின்றது; இதனை நீ கருதாதது ஏனே' என்று வாடி உரைத் தான். 24. நாணிக்கண் புதைத்தல் (42. அகலிடம்) இங்ங்னம் தலைவன் தன்முன் நின்று தன்னைப் புகழக் கேட்ட தலைவி பெரு நாணினள் ஆதலின், அவன் முன் நிற்கலாகாது நாணி ஒரு பூங்கொடியின் மறைவில் கண் புதைத்து நிற்கக் கண்ட தலைவன் 'பூங்கொடியே! என் உயிர் நையா வண்ணம் நான் ஒதுங்குவதற்கு எனக்கு ஒரு புகல் இடம் தருவாயாக' என்று கூறினன். 25. கண்புதைக்க அருந்தல் (43. தாழச்செய்தார்) தலைமகள் நாணிக் கண் புதையா நிற்பக் கண்ட தலைமகன் ' என் மனம் நடுங்க வேல் போலும் கண்களை மூடிக் கொண்ட பொன்னே..! உன் கண் என்னை வருத் தும் என்று கண்ணே மறைத்து என்னை வாழச் செய்தாய், என் மனம் நடுங்காது செய்ய வேண்டுவதாயின் நீ உன் மேனி முழுவதும் மறைப்பாயாக’’ என்ருன். 26. நாண் விட வருத்தல் (44. குருநாண்) இங்ங்னம் தலைவன் தனது ஆற்ருமையைக் கூறக் கேட்ட தலைவி, ஒரு நாளும் தன்னைவிட்டு நீங்காத நாண் . (அழலைச் சேர்ந்த மொலா போல க்) தன்னை