பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிங் 2- திருக்கோவையார் உரைநடை விட்டு நீங்க, அதன் பிரிவாற்ருது வருந்தி இனி வரக் கடவ நாளில் (மேல் வரும் நாளில்) இங்ங்னம் நாண் அழியப் பிறவாது ஒழிய வேண்டும்’ என ஆற்ருது வருந்தினள். 27. மருங்கு அணைதல் 45. கோலத்) தலைவி நாண் இழந்து வருந்தி நிற்றலைக் கண்ட தலைமகன் அவளது வருத்தத்தைத் தனிப்பான் போன்று வண்டுகளை விளித்து வண்டுகாள்! தனிக் கொம்பில் ஏறி அதன் அடிக்கண் குறைப்பவர் போலும் தன்மைய து நீங்கள் தேன் உண்ணும் ஆசையால் இவளது நூலை ஒத்த இடையின் நொய்மையைக் கருதாது இவளது கொண்டையைச் சார்வது; ஆதலால் கொண்டையை விட்டு நீங்குங்கள். என்று அவ் வண்டுச் சாதிகளை ஒட்டுவாரைப்போலத் தலைவியின் மருங்கு அனைந்தான். 28. இன்றியமையாமை கூறல் (46. நீங்கரும்) அங்ங்னம் தலைவியின் மருங்கு அணைந்த தலைவன் 'விகம்பும் நிலனும் ஒருங்கு பெறவரினும் இத் தலைவி யின் செப்பையும் கோங்கரும்பையும் வென்று என்னையும் அடிமை கொண்ட அவளுடைய கொங்கைகளை யான் மற வேன்' என்று தன்து இன்றியமையாமையைக் கூறினன். 29. ஆயத்து உய்த்தல் (47. சூளாமணி) இன்றியமையாமை கூறிப் பிரிய நின்ற தலைவன் தலைவியை நோக்கி, நினக்கு எனது ஆருயிர் அடிமை ஆயிற்று; ஆதலால் பல சொல்லிப் பெறுவது என், என் அமிர்தே! என் அணங்கே! என் தோளாமணியே! மான் பினையே! இனி நீ சென்று நினது ஆயத்திடைச் சேர்வாயாக’ எனக் கூறித் தலைவியை ஆயத்துக்கு அனுப்பினுன்.