பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்ட உ திருக்கோவையார் உரைநடை 10. நீயே கூறு என்று மறுத்தல் (99. அந்தியின்) அங்ங்னம் அவ்விடம் காப்புடைத்து என்று கூறின தோழி, பலாச்சுளையைக் கடுவன் (ஆண்குரங்கு)மந்தியின் (பெண் குரங்கின்) வாயில் கொடுத்துப் பாதுகாக்கும் சிலம்ப (மலையை உடையவனே :) தலைவியின் மனம் நெகிழும்படி இனிய வாய்மொழிகளை அவளிடம் நீயே சென்று சொல்வாயாக எனக் கூறி மறுத்தனள். (உட்கோள் :-கடுவன் மக்தியை மகிழ்வித்தது போல உன் வார்த்தைகளே அவளிடம் நீயே கூறி அவளே மகிழ்விப்பாயாக என்பது உள்ளுறை உவமம்.) 11. குலமுறை கூறி மறுத்தல் (100. தெங்கம் பழம்) நீயே கூறு எனச் சொல்லக் கேட்ட தலைமகன் இது வரை என் குறையை முடித்துத் தருவேன் என்று *உடம்பட்ட தோழி இப்போது என்னிடம் நின் குறையை நீயே முடித்துக்கொள் என்கிருளே என ஆற்ருது நிற்ப, அவனை ஆற்றுவிப்பது காரணமாக நீர் பெரியீர், யாம் சிறியேம் எனக் குலமுறை கூறித் தோழி மறுத்தனள். (நீர் தொழத்தக்க உயர்ந்த குலத்துள்ளிர், நாங்கள் இழி குலத்தவர் என்றபடி) 12. நகையாடி மறுத்தல் (101. சிலையொன்று) குலமுறை கிளத்தலால் தோழி மறுத்துக் கூறியவா றன்று என உட்கொண்டு தலைமகன் மகிழ்ந்து நிற்ப, 'எம் ஐயன்மார் எய்த கணை. ஒரு பெரிய யானையின் முகத்தை உருவிச் சென்று மண்ணில் குளித்துப் புதையும்; அவ்வாறன்றி இந்தத் தலைவர் ஒரு மான்மேல் எய்த அம்புடன் அந்த மான் விரைந்து ஓடி விட்டது. ஆதலால் இவர் கையில் இருந்த வில் கொலைத் தொழிலில் மிக்க திண்ணியது தான் !' என்று கூறித் தோழி நகையாடினள். - f _ 米 91, 93 ஆம் பாடல்கள் பார்க்க.